தாய் போலீசில் புகார்
பாப்பிரெட்டிப்பட்டி. நவ, 9-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலம் விற்ற பணம் ரூபாய் 50 லட்சத்துடன் காணாமல் போன மகனை மீட்டுக் கொடுக்கும்படி போலீசில் தாய் புகார் கொடுத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாலூர் கிராமத்தைச் சார்ந்தவர் பழனியப்பன், சிந்தாமணி தம்பதியினர்,
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்
இவர்களது மகன் குணசேகரன் வயது 32 சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகின்றது , திருமணம் ஆகவில்லை
இந்த நிலையில் இந்த குடும்பத்திற்கு சொந்தமான சொத்து சாலூர் பகுதியில் இருந்து வந்தது ,இந்த நிலத்தை விற்று மகன், மகள், பெற்றோர் ஆகியோர் பிரித்துக் கொள்ள திட்டமிட்டு நிலத்தையும் விற்று உள்ளனர்
அந்த நிலம் விற்ற பணத்தில் தனது பங்கு தொகையான 50 லட்சம் ரூபாயுடன் . மனநலம் பாதிக்கப்பட்ட குணசேகரன் அரூர் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தைச் சார்ந்த தனதுசித்தப்பா பொன்னுசாமியிடம் சென்று50 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட குணசேகரன் வீட்டுக்கு வராமல் காணாமல் போய் உள்ளார், இது குறித்து இவரது பெற்றோர் பழனியப்பன் மற்றும் தாய் சிந்தாமணி ஆகியோர் பாப்பம்பாடியில் உள்ள குணசேகரனின் சித்தப்பா பொன்னுசாமியிடம் சென்று எனது மகன் எங்கே? அவன் எடுத்து வந்த பணம் எங்கே என்று கேட்டுள்ளனர்
அதற்கு பொன்னுசாமி பணம் 50 ஆயிரத்தை செலவிற்கு வாங்கிக்கொண்டு சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை, அவன் வந்தால் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் பெற்றோர் பணத்துடன் சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை, அவனை கண்டுபிடித்து தருமாறு ஏ, பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்கள்
அதன் பெயரில் உதவி ஆய்வாளர் செய் வாட் வழக்குப்பதிவு செய்து 50 லட்சம் ரூபாய் பணத்துடன் காணாமல் போன சற்று மனதிலும் சரியில்லாத குணசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்
பணம் 50 லட்சத்துடன் காணாமல் போன சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
Comments
Post a Comment