42 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணி பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் துவக்கி வைத்தார்

42 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் முத்துகுமார் துவக்கி வைத்தார்


பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோம்பூர் மஞ்சவாடி போன்ற பகுதிகளில் அதிகமாக பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய இடத்தில் சாலை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

 இதனால் அப்பகுதி மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் பழங்குடியினர் நிதியில் இருந்து 42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கோம்பூர் பகுதியில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி தேன்மொழி ஜெயக்குமார் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Comments