தர்மபுரி காவல் உயர் அதிகாரி மீது தாக்குதல் 2 பேரை நன்றாக கவனித்து சிறைக்கு அனுப்பிய காவல்துறை

தர்மபுரி காவல் உயர் அதிகாரி மீது தாக்குதல்
 2 பேரை நன்றாக கவனித்து சிறைக்கு அனுப்பிய காவல்துறை


 தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகில் கடந்த வாரம் தர்மபுரி மாவட்ட காவல் உயர் அதிகாரி ஒருவர் சீருடைகள் இல்லாமலும், காவல்துறை வாகனத்தில் செல்லாமல் தனது வாகனத்தில் போக்குவரத்து நெரிசலில் சென்று கொண்டிருந்தார்


 அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக சென்ற இரண்டு நபர்கள், காவல்துறை அதிகாரியின் வாகனத்தோடு மோதுவது போலவும், முறைகேடாகவும் வாகனத்தை செலுத்தியுள்ளார்



 வாகனம் சரியாக ஓட்டவும் விதிகளை கடைபிடிக்கவும் என உயரதிகாரி அவர்களிடம் கூறியுள்ளார்



 இதனால் கோபமடைந்த அந்த இரு டான்களும் எங்களிடமே வாயை உயர்த்தி பேசுகிறாயா? எனக் கூறி இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி தங்களது தாதா வேலையை காட்டி தாக்குதல் தொடுத்துள்ளனர்


 இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகள் மீது கை வைத்தவன் எவனடா? என்று கூறி அப்பகுதியில் சென்றவர்கள் எல்லாம் அந்த இரு நபர்கள் மீது கை வைத்துள்ளனர்



 அப்போதுதான் அந்த இரு நபர்களுக்கும் அய்யய்யோ காவல்துறை மீது கை வைத்து விட்டோமா? என பதறினர்


 இந்த நிலையில் காவல் உயர் அதிகாரிகள் மீது கை வைத்து விட்டார்கள் என்ற செய்தி மாவட்ட தலைமை காவல் அலுவலகத்திற்கு தீயாக பரவியத


 உடனடியாக காவலர்கள் படை விரைந்து சென்று அய்யா மீது கை வைத்தவர்களை அலேக்காக. காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்று சரியான முறையில் நல்ல தரமான சிகிச்சை அளித்தனர்


 தற்போது இருவரும்  சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கின்றனர் 


 இச்சம்பவம் தற்போது தர்மபுரி காவல்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Comments