பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோடஅள்ளியில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக - பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோடஅள்ளியில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக - பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பேகாரஅள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பட்டகப்பட்டி, சுன்னாம்பட்டி கிராமங்களில் இருந்து திமுக, பாமக கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி முனிவேல் தலைமையில் கெரகோடஅள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் இல்லத்திற்க்கு சென்று அவரது முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு, வேட்டி அணிவித்து அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் காவேரி, நகர செயலாளர் காந்தி, அவைத்தலைவர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல்,
ஒன்றிய கவுன்சிலர் மாது, கிளை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment