டிரான்ஸ்பர் வந்தும் காவல் நிலையத்தை காலி செய்ய மறுக்கும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மீனா குமாரி-

டிரான்ஸ்பர் வந்தும் காவல் நிலையத்தை காலி செய்ய மறுக்கும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மீனா குமாரி-


அமோக வசூல் வேட்டையா இல்லை சமூக அக்கறையா.!!!

 சமீப காலமாக கோவை பகுதிகளில் வழிப்பறி கொள்ளை வீடு புகுந்த திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக கோவை ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 14ஆம் தேதி அப்பகுதிவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எங்கள் பகுதிகளில் வசிப்பதற்கு அச்சமாக இருக்கிறது எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று ரத்தினபுரி காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் திரு பாலகிருஷ்ணன் அவர்களையும் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர். 

 இதுகுறித்து கள ஆய்வில் இறங்கிய நமது சிறப்பு செய்தியாளர் குழுவிற்கு திடுக்கிட வைக்கும் சில முக்கிய ஆதாரங்கள் சிக்கியிருக்கிறது.

 அதில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்  மீனா குமாரி, இவரது இந்த இரண்டு ஆண்டு கால பணி காலத்தில் தான் இந்த அளவிற்கு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன அதற்கு இவரது அதிகார துஷ்பிரயோகமும் அந்த துஷ்பிரயோகத்தின் மூலமாக இவர் அடித்த மாமுல் வேட்டையும்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 இவர் கையாண்ட ஒரு சில வழக்குகளின் முக்கிய ஆதாரங்கள் நமது சிறப்பு செய்தி யாளர்கள் குழு சேகரித்து இருந்தனர் இதில் நாம் புரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால் குற்றம் செய்தவர்களிடம் பேரம் பேச வேண்டியது பேரம் படிந்தால் அரசியல் சாசனத்தில் இல்லாத தனது சொந்த பெயிலில் வெளியே டாடா காண்பித்து அனுப்ப வேண்டியது, பேரம் படியவில்லை என்றால் எஃப் ஐ ஆர் போட்டு அரசியல் சாசனத்தில் இருக்கும் பிரிவுகளில் வழக்கை பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டியது.

 மற்றொருபுறம் குற்றம் செய்யாத அப்பாவிகளை பிடித்து வந்து அவர்களை மற்றும் அவர்களை சார்ந்தவர்களை குழப்பி பயமுறுத்தி பேரம் பேச வேண்டியது பேரம் படிந்தால் வீட்டுக்கு பேரம் படியவில்லை என்றால் ஜெயிலுக்கு Task accomplished!

 இதுபோன்ற வசூல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வரும் ஆய்வாளர் மீனா குமாரி அவர்களின் அதிகார துஸ்பிரியோகமும், பணியை சரிவர செய்யாத காரணத்தினால் தான் இன்று கோவை ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டு கூறியிருந்தார்கள். சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் சட்ட வல்லுனர் ஒருவர் கூறுகையில் தற்போது ஆய்வாளர் மீனா குமாரி அவர்களுக்கு இரத்தினபுரியில் இருந்து டிரான்ஸ்பர் வந்திருப்பதாகவும் ஆனால் அவர் ரத்தினபுரி காவல் நிலையத்தை விட்டு போக மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார் அதற்கு காரணம் அடிப்படையில் ஆய்வாளர் மீனா குமாரி கோவை மாவட்டத்தை சார்ந்தவராக இருப்பதாகவும், இந்த மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவு இருப்பதாலும் அரசியல் பின்புலம் இருப்பதாலும் அவரை மாற்றுவதற்கு மேல் அதிகாரிகளும் அஞ்சுவதாக தெரிகிறது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார், அதேபோல் ஆய்வாளர் மீனா குமாரையும்  அவருக்கு இங்கிருக்கும் ராஜபோக வாழ்க்கை காரணமாக தனது பின்புலங்களை பயன்படுத்தி கிடைத்த ட்ரான்ஸ்பரை தட்டி கழிப்பதாக தெரிய வருகிறது என்று சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

 மேலும் அவர் கூறுகையில்   உன்னதமான காவலர் பணியை துஷ்பிரயோகம் செய்து அப்பாவி மக்களை துன்புறுத்தியது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த ஆய்வாளர் மீனாகுமாரி போன்ற அதிகாரிகளை தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்திற்கு பணியமர்த்த வேண்டும் என்று அப்பகுதியை சார்ந்த சட்ட வல்லுனர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். 

 இவர் மீது  நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Comments