தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5000 விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண் இயந்திரமையமாக்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் சென்னையில் மாநில முழுவதும் 5000 விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் விழாவை  தொடங்கி வைத்தார்கள்.இதன் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி முன்னாள் அமைச்சர்,மேற்கு மாவட்ட கழக செயலாளருமான முனைவர்.பி.பழனியப்பன் அவர்களின் ஆலோசனைபடி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சார்பில் அ.பள்ளிப்பட்டி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானியவிலையில் பவர் டில்லர் வழங்கி சிறப்புரையாற்றினார். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் திருமதி.உண்ணாமலை குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் திரு.C.முனிகிருஷ்ணன் அவர்களும்,வேளாண்மை உதவி பொறியாளர்கள் திரு.பி.வேலுசாமி,இரகுராம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments