அண்ணாவின் 115 வது பிறந்தநாள்முதல்வரின் முத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் அறிக்கை

அண்ணாவின் 115 வது பிறந்தநாள்
முதல்வரின் முத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் அறிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி. செப், 14 -

வருகின்ற 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமம் நகரங்கள் தோறும் கட்சியினர் அண்ணாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடவும், அண்ணாவின் புகழை பட்டித்தொட்டி எங்கும் சேர்த்திட வேண்டுகின்றேன்


 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புதுமையான மகளிர் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் நமது முதல்வர் தளபதியாரின் திருக்கரங்களால் முத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவக்கி வைக்கப்படுகின்றது


 அன்றைய தினம் ஒரு கோடி 6.50 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார், இந்த புரட்சிகரமான திட்டத்தை மேற்கு ஒன்றியத்தில் உள்ள பட்டித் தொட்டி எங்கும் கிராமங்களிலும், மகளிரிடம் திட்டத்தின் பயன் குறித்து அறிந்திடும் வகையிலும் கட்சியினர் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் இவ்வாறு அந்த அறிக்கையில் திமுகவின் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி .எஸ். சரவணன் தெரிவித்துள்ளார்

Comments