பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு உட்பட்ட மாரியம்பட்டி கிராமத்திற்கும், அதனை சுற்றியுள்ள செங்காட்டு புதூர் கிராமத்திற்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் மலைப்பகுதி சேர்ந்த பகுதி மக்களுக்கு பேருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட மாரியம்பட்டி கிராமம் செங்காட்டு புதூர், உள்ள பகுதிகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சரியான நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதியில் இருந்து இரண்டு மூன்று கிலோமீட்டருக்கு தொலைவில் கடந்து வந்து அதிகாரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். இப்பகுதி கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் வெளியூர் பணிகளுக்கும் செல்லும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, போன்ற பகுதிகளுக்கு பணிகளுக்காக செல்லும் அரசு ஊழியர்கள், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பேருந்து வசதி இல்லாமல் பல வருடங்களாக தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுடைய வளர்ச்சிகள் தடைபடுகிறது. இது குறித்து அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத சூழலில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களிடம் சமூக ஆர்வலர் எம் எஸ் பி மணிபாரதி கொடுத்த மனுவை பெற்ற மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் இளைஞர்கள் தானாக முன் வந்து மக்களுக்கு எது தேவையோ அதனை அறிந்து மனுவாக கொடுத்தால் அதற்கு அரசும், அரசு ஊழியர்களிம் எந்த ஒரு காலதாமதம் இன்றி அப்பகுதியில் ஆய்வு செய்து மாகளுக்கு தேவையானதை செய்து முடிப்பார்கள், ஆனால் ஒரு சில அறியாத மக்கள் தேவையான அடிப்படை வசதிகளை வாய் சொல்லாக சொல்லி விட்டு செல்வதால் அதனை அதிகாரிகளும் காதால் கேட்டு விட்டு கடந்து விடுகின்றனர். ஆகவே இளைஞர்கள் தானாக முன் வந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு மனு கொடுத்தால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும் கூடிய விரைவில் மாரியம்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்துள்ளார்
Comments
Post a Comment