பொம்மிடி அருகே ஏற்காடு மலை கிராமங்களுக்கு இணைப்புத் தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பொம்மிடி அருகே ஏற்காடு மலை கிராமங்களுக்கு இணைப்புத் தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு


 திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைக்க நடவடிக்கை


 பாப்பிரெட்டிப்பட்டி. ஆக, 18 -


பொம்மிடி அருகே உள்ள மலை கிராம மக்கள் தினசரி வேலைக்கு ஏற்காடு மலைப்பகுதிக்கு சென்று வர தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உத்தரவிட்டார்


 தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள அஜ்ஜம்பட்டி, போதக்காடு ,புதூர், பையர்நத்தம், பி, பள்ளிப்பட்டி போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் பெருமளவு வாழ்ந்து வருகின்றனர்


 இவர்கள் தினமும் சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உள்ள பெரிய காடு, அனார்க்காடு, வெள்ளக்கடை, மற்றும் மலைப் பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு தினமும் தினக்கூலிக்கு வேலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்


 சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த எஸ்டேட் பகுதிக்கு வேலைக்கு வாகனத்தின் மூலமாக சென்றால்  100 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது


 இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணனிடம் மலை கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்


 இது குறித்து வேளாண்மை துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒன்றிய செயலாளர் சரவணன் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது


 இந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்


 அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சாந்தி பாதை அமைக்க வேண்டிய போதக்காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், அதன் பேரில் உடனடியாக தர்மபுரி மாவட்ட எல்லை வரை தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்


 பின்பு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் உண்டு உறைவிட பள்ளி, தங்கு விடுதிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின்போது திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்

Comments