பாப்பிரெட்டிபட்டி அருகே ஏரியில் மிதந்து வந்த ஆண் சடலம் - உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கொலையா ? தற்கொலையா ? என விசாரணை.

தருமபுரி : 18.08.23

பாப்பிரெட்டிபட்டி அருகே ஏரியில் மிதந்து வந்த ஆண் சடலம்  - உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கொலையா ? தற்கொலையா ? என விசாரணை.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாலூர் அருகே உள்ள  கோட்டைமேடு பகுதியில் உள்ள  பெரிய ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்  ஏரியில் மிதந்து கிடந்த சடலத்தை கைப்பற்றி இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த நபர் கொக்காரப்பட்டி  பகுதியை சேர்ந்த சிவன் (50) என்பதும்  இவருக்கு திருமணமாகி  காவேரி என்ற மனைவியும் இருமகன் ஒரு மகள் உள்ளனர் என தெரியவந்தது.

உயிரிழந்த சிவன்  மீன் வியாபாரம் செய்து வந்ததாகவும், இவர் கடந்த  16ம் தேதியன்று மாலை நேரத்தில் தனது பக்கத்து வீட்டுக்காரர் சுகுமார் என்பவருடன் மீன் பிடிக்க சென்றுள்ளார். இருவரும் ஏரி பகுதியில்  அமர்ந்து மது அருந்தியுள்ளனர். 

இது குறித்து பின்பு சுகுமாரை அழைத்து விசாரித்த காவல் துயைினரிடம், தான் வைத்திரு்த 20 ரூபாயை சிவனிடம்  கொடுத்து விட்டு சென்றதாகவும், மதுபோதையில் இருந்த சிவன் ஏரியில் மீன்பிடிக்க சென்றது போது மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழிந்திருக்கலாம் என   சந்தேகத்தின் பேரில் முதற்கட்ட முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இறந்த சிவனின் உடலை அ.பள்ளிப்பட்டி போலீசார் பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த சிவன் உண்மையிலே மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா ? அல்லது மது அருந்தும் போது ஏதேனும் தகராறு ஏற்பட்டு அதில் ஏரியில் விழுந்து இறந்தாரா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments