மக்கள் குடிக்கும் குடிநீரில் விஷமா? அரூர் கோட்டாட்சியர் ஆய்வு - அளவுக்கு அதிகமான பிளிச்சிங் பவுடர்... - மாரியம்பட்டி மக்கள் குடிநீர் இல்லாமல் அவஸ்த்தை !!!!!

மக்கள் குடிக்கும் குடிநீரில் விஷமா? அரூர் கோட்டாட்சியர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வசதி  உருவாக்கப்பட்டது. இந்த குடிநீர் திட்டம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 4 நாட்களுக்கு ஒரு முறை என தருமபுரி பகுதிவாழ் மக்களுக்கு தண்ணீ திறந்து விடப்படுகிறது. மற்ற நாட்களில் கிராம புற பகுதியில் உள்ள ஏரிகள் மூலம் உயர் கோபுர நீர் தொட்டிகளில் சேகரித்து  மக்களுக்கு குடிநீர் வசதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. நீர் தொட்டியில் சேமிக்கப்படும் ஏரி தண்ணீராக இருந்தாலும் சரி ஒகேனக்கல் கூட்டு குடிநீராக இருந்தாலும் சரி அதனை சுத்தம் செய்து மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் பல்வேறு கிராம புறங்களிலும் பஞ்சாயத்து பகுதிகளில் இருந்து மக்களுக்கு கொடுக்கப்படும் குடிநீரில் அளவுக்கு அதிகமான பிளிச்சிங் பவுடரை சேர்த்து விடுவதால் அந்த குடிநீரை பயன்படுத்தும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் அதிகப்படியான பிளிச்சிங் பவுடரை கலந்து விடுவதால் எங்களால் அந்த குடிநீரை சரியாக பயன்படுத்த முடியவில்லை. குடிக்கும் போது வாந்தி வரும் உணர்வை தூண்டுகிறது. குடித்த கொஞ்சம் நேரத்தில் மயக்கம் வருவதை போல ஒரு உணர்வை உணர வைக்கிறது, என மாரியம்பட்டி கிராம பெண்கள் வேதனையோடு தங்களின் ஆதைங்கத்தை கூறுகின்றனர். தங்களது வீட்டில் இருந்த குடிநீரை ஒரு நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு அதனை அரூர் கோட்டாட்சியர் அவர்களிடம் அந்த பிளிச்சிங் பவுடர் கலந்த குடிநீரை கொடுத்து மக்கள் குடிக்க சொன்னவுடன் எந்த ஒரு தயக்கமும் இன்றி அந்த தண்ணீரை குடித்து வேதனை அடைந்தார் அரூர் கோட்டாட்சியர். மேலும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் இது பற்றி கேட்கும் போது பிளிச்சிங் பவுடரை குடிநீரில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி பருகினால் கண் பார்வை குறைபாடு, வயிற்று போக்கு, கால் மூட்டு வலி, ஆண்மை குறைவு, மூளை சோர்வு, மாரடைப்பு ஏற்படவும் காரணமாக இருப்பதாக உலக சுகாதர மையம் தகவல்களை தெரிவித்துள்ளது. இது கூகுள் இணையத்தளத்திலும் உள்ளது. இப்படி குடிக்கும் நீரில் அதிகமான பிளிச்சிங் பவுடர்  இருந்தால் எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், கர்பினி பெண்களுக்கு உடல் ரீதியாக ஆபத்து  ஏற்படலாம் ஆகவே அரூர் கோட்டாட்சியர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி அவர்கள் மாவட்ட சுகாதரத்துறை நேரில் வந்து குடிநீரை  ஆய்வு  செய்ய வேண்டும், மற்றும் அதன் ஆய்வுகளை உண்மை தன்மையுடன் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரூர் கோட்டாட்சியரிடம்  நடவடிக்கை எடுக்கவும் மாரியம்பட்டி இளைஞர்கள் பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments