மாஸ் காட்டிய பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மிரண்டு போன அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம்..!!

மாஸ் காட்டிய பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மிரண்டு போன அமைச்சர் எம் ஆர் கே 
தருமபுரி மாவட்டம் முழுவதும் 13-08-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள திமுக கட்சியை சேர்ந்த மூத்த முன்னோடிகளை

 சந்திக்கவும், மற்றும் திமுக வின் இருவண்ண கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தருமபுரி மாவட்ட முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டார். இதில் கடத்த்துர், போதக்காடு, பாப்பிரெட்டிப்பட்டி, போன்ற பகுதிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர்கள் நிகழ்ச்சிகளை தலைமை தாங்கி நடத்தினார்கள். இந்த பகுதிகளில் நடந்ததை விட சாமியாபுரம் கூட்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிதான் பெரும் ஆச்ரையமாக இருக்கிறது. இது மாநாடு போன்று உள்ளது அந்த அளவிற்கு மக்கள் திரண்டு நிற்கின்றனர். பரவாயில்லை பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் முத்துகுமார் இப்பவே எப்படி ஆள் சேர்ப்பது என்று நன்றாகவே பழகிவிட்டார் என்று அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்களையும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் முத்துகுமார் அவர்களையும் பாராட்டி  இன்று நடந்த கூட்டங்களில் இது போன்ற பெரும்பான்மையான கூட்டத்தையும் மக்கள் வெள்ளத்தையும் நான் பார்க்கவில்லை இது நான் கண்டு மிரண்டு விட்டேன் என்றார். இதனை கேட்டு கூடியிருந்த பெண்களும் ஆண்களும் உற்சாக கைத்தட்டலுடன் நமது ஒட்டு உதய சூரியன் என கைகளை தூக்கினர்.

Comments