சுதந்திர தின விழாவின் போது அ. பள்ளிபட்டி காவல்துறை பாதுகாப்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் 750 மக்கள் கலந்து கொண்டு அசத்தல்
இன்று 77 வது சுதந்திர தின விழா தினத்தன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதனை ஒட்டி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சுமார் 8 கிராமங்களில் அ பள்ளிப்பட்டு காவல்துறையின் பாதுகாப்போடு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் அதிகாரப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மாரியம்பட்டி கிராமம், பள்ளிப்பட்டி இந்திரா நகர் இருளபட்டி, மூக்கா ரெட்டிபட்டி பாப்பம்பாடி H.புதுப்பட்டி கவுண்டம்பட்டி கோபாலபுரம் போன்ற பகுதிகளில் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காதவாறு கிராம சபை கூட்டம் நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக ஆ பள்ளிப்பட்டி காவல்துறையினர் பங்கேற்றனர். மொத்தம் எட்டு கிராமங்களில் சுமார் 750 கிராம மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment