வேலையே ஆகல - நிலம் அளக்க 31 ஆயிரம் லஞ்சம் - 25 கிலோ கோழி கறி சாப்பாடு அரூர் சர்வெயர்களின் - ! ச்சை புத்தி..!!!! - புலம்பலில் அரூர் சர்வேயர் நடவடிக்கையில் இறங்க போகும் அரூர் கோட்டாட்சியர்...!!! எனக்கு சாமியாக இருந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் காப்பாற்றனும்...!!!

                      

வேலையே ஆகல - நிலம் அளக்க 31 ஆயிரம் லஞ்சம் - 25 கிலோ கோழி கறி சாப்பாடு அரூர் சர்வெயர்களின் - ! ச்சை புத்தி - புலம்பலில் அரூர் சர்வேயர் நடவடிக்கையில் இறங்க போகும்

அரூர் கோட்டாட்சியர்...!!!
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஆர் கோபினாதம்பட்டி பஞ்சாயதிற்குட்பட்ட  கருத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த சிவசக்தி முருகன்  - தம்பதியினர் தன்னுடைய சொந்த நிலம் கிரயம் மூலம் பாதிக்கப்பட்டதால் நிலத்தை  அளக்க 2022 ஆம் ஆண்டு  7 மாதம் ஆன்லைன் மூலமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளார்.

ஆனால் தங்களுடைய நிலத்தை அளக்க அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்போது ஆய்வு செய்யவோ அளக்கவோ யாரும் வரவில்லை, இதனால் நான் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். 
முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்தேன். அப்போது என்னுடைய பகுதிக்கு வந்துவிட்டு இதில் பிரச்சனை உள்ளது என்று ஒரு பொய்யான தகவல்களை கூறி அளக்காமல் அப்படியே கிடைப்பில் போட்டுவிட்டனர் அரூர் நில அளவயர்கள். 
இப்படி வருடம் வருடம் அரூர் தாசில்தார் அலுவலகத்தில் சென்று வந்த எனக்கு மிகப்பெரிய மன அழுத்தம் ஏற்பட்டதுதான் மிச்சம், முதல்வர் தனி பிரிவு மனுவிற்கு இது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை, இறுதியாக AD யிடம் இருந்து தபால் வந்தது அதில் வட்டாட்சியரை சந்திக்க வேண்டும் என்று இருந்தது. 
2022 ஆண்டு சர்வேயர் சக்திவேல்  என்னுடைய நிலத்திற்கு வந்து முதலமுறையாக ஆய்வு பாக்கலாம் இருங்கள் என்று கூறியும் பொறம்போக்கு நிலமாக உள்ளது எனவும் கூறிவிட்டார். சர்வேயர் சக்திவேல் என்னை ஒருமையில்  வாயா போயா என்று பேசுவார். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.  அதிகாரம் இருக்கிறதென்று இப்படி ஒரு சில அரசு அதிகாரிகள் மக்களிடம் பேசுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
நிலத்தை பார்வையிட வந்தபோது செலவுக்காக சர்வேயர் சக்திவேல் 1000 ரூபாய் பணம் வாங்கினார். சர்வேயர் சக்திவேலுக்கு பிறகு  கடந்த 2022- 2023 ஆண்டில் சர்வேயர் நித்தியா என்பவர் மொரப்பூர் பகுதி சர்வெயராக இருந்தார்.  என்னுடைய நிலத்திற்கு  இரண்டுமுறை நேரில் வந்து அளந்தது இவர் மட்டும்தான். அன்றைய தினம் மாலை லாகின் செய்துவிட்டேன் என்று கூறி 5000 ஆயிரம் மீனலின் துணையுடன் வாங்கினார். மற்றும் என்னுடைய நிலத்தில் முற்புதராக  உள்ளது என்று குறை சொல்லி என்னுடைய மனுவை நிராகரித்து சென்றார் சர்வேயர் நித்தியா 
 ஆனால் அடுத்த நாள் காலை ஆன்லைனில் உங்களுடைய நிலத்தின புல எண் பதிவாகவில்லை என்று கூறியபோது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வேயர் நித்தியா மேடம் எங்கே என கேட்கும் போது அவர் நல்லம்பள்ளி டிரான்ஸர் ஆகிவிட்டார். என்று கூறும்போது மிகுந்த மனம் வருத்தம் ஆனது.  நித்தியாவிற்கு பிறகு மீண்டும் சர்வேயர் சக்திவேல் அவர்களே மொரப்பூர் பகுதி சர்வேயராக பொறுப்பேற்கிறார். 

மீண்டும் 2023 ஆம் ஆண்டு CM பெட்டிசன் போட்டிருந்தேன். அதன் பெட்டிடன் மூலமாக அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த DT யிடம் இருந்து அழைப்பு வந்தது. முதல் நிலை வரவுறையாளர் அவர்களிடம் என்னை வைத்து முதல்வர் பெட்டிசனுக்கு என்ன செய்தீர்கள் என DT கேட்கிறார். அதற்கு அலுவலகத்தில் இருந்த பெண் அலுவலர் நான் சம்பந்தபட்ட அலுவலருக்கு அனுப்பிவிட்டேன் என்றார். 

சர்வேயர் நித்தியா மூலம் ஓய்வு பெற்ற நில அலவயரை வைத்து எண்ணுடைய நிலத்தை அளந்து சென்றனர். அப்போது நிலம் அளக்க கிராம அலுவலர் உதவியாளர் கிருஷ்ணசாமி 15 பேருக்கு சாப்பாடு செய்ய வேண்டும் என கூறினார். நான் ஓட்டலில் வாங்கி வரவா என்றேன் அதற்கு அவர் உயிருடன் 25 கிலோ கோழி கறி சாப்பாடு செய்து தர சொன்னார்கள். இதற்கு மட்டும் 4000 ஆயிரம் செலவு ஆனது. எனது வழக்கறிஞர் மூலமாக  மீனல் மற்றும் கிராம அலுவலர் அசோக்குமார் அவர்களுக்கு 15000 கொடுக்கப்பட்டது. 
 
ஆனால் இவ்வளவு நடந்து இதுவரையில் என்னுடைய நிலத்தை ( உட் பிரிவு _  சப் டிவிசன்  )செய்யவும் எந்த ஒரு அரசு ரீதியான நடவடிக்கையில் யாரும் உண்மையாக பணி செய்யவில்லை. 
எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டார்கள். இதன் காரணமாக நான் செய்தியாளர்களை சந்திக்க தொடங்கினேன். நடந்த உண்மைகளை அவர்களிடம் கூறிய போது உடனடியாக அரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சர்வேயர் சக்திவேல் அவர்களை செய்தியாளர் பேசினார். ஆனால் சக்திவேல் அவர்கள் இவருடைய பகுதிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இவர் பகுதிக்கு விஜயகுமார் என்ற சர்வேயர் உள்ளார். 

அவரை தொடர்பு கொண்டு பேசுங்கள் என்றார். பிறகு என்னிடம் ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதை பற்றி சர்வேயர் சக்திவேல் அவர்களிடம் கேட்கும்போது எனக்கு நியாபகம் இல்ல சார் ரெண்டு வருசம் ஆச்சு நான் வாங்கவில்லை என்று கூறி தன்னுடைய தகவல்களை கூறும் விதத்தை முடித்து கொண்டார். பிறகு அரூர் செய்தியாளர்கள் கோட்டாட்சியர் அவர்களை தொடர்பு நடந்த விபரங்களை கூறினார்கள். நடந்ததை அறிந்த 
அவர் மிகுந்த வேதனை அடைந்தார்.

 என்னை சந்திக்க வேண்டும் என கூறினாராம் எனக்கும் மிகவும் நம்பிக்கையாக இருந்தது. பிறகு தாசில்தாரிடம் செல்போனில் சம்பவத்தை பற்றி முறையிட்டேன் ஆனால் அவர்  என்னை வைத்து எதாவது உங்களிடம் பணம் மற்றும் வேறு எதாவது பேசினால் தயவு செய்து நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம் என அழுத்தமாக கூறினார்.  

மேலும் என்னை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுங்கள், அரூர் கோட்டாட்சியர் மூலமாக சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது முழு சம்பவத்தை அறிந்த R.கோபிநாதம்பட்டி  கிராம அலுவலர் அசோக்குமார், மற்றும் அவரின் உதவியாளர் கிருஷ்ணசாமி நேர்த்தியாக இன்று காலை 11-30 மணியளவில் எனது கர்த்தான்குலம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து நீங்கள் இணையதள மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட மனு, பட்டா, சிட்ட, எண் என அனைத்து கோப்புகளையும் ஆவணங்களையும் வாங்கிசென்றார், எதற்கு என கேட்டதற்கு சர்வேயர் சக்திவேல் வாங்கி வரச்சொன்னார் என்றனர்.

 நேற்றுதான் சர்வேயர் சக்திவேல் அவர்களை நேரில் சந்தித்து பேசும்போது எனக்கும் உங்கள் பகுதிக்கும் சம்பந்தம் இல்லை, விஜயகுமார்தான் எனக்கூறினார். திடீரென நானே எல்லாவற்றையும் முடித்து கொடுக்கிறேன் செய்திகள் வெளியிட்டாமல் பார்த்து கொள்ளுங்கள் இது பெரிய அளவில் பிரச்சினையாக உருவாகும் எங்கள் வேலைக்கு பிளாக்மார்க் ஆகும், என்று கிராம அலுவலர் அசோக்குமார், சர்வேயர் சக்திவேல் அவர்களும் என்னை தொடர்பு கொண்டு புலம்பி தவித்தனர். 

இப்படி இருப்பவர்கள் இத்தனை நாள் அலைந்தேனே என்ன செய்தார்கள் மனிதர்களின் உணர்வுகள் அறியாமல் போனார்களா ? என் நெற்றியில் வரும் வியர்வைகளின் அடையாளத்தை பார்க்காமல் போனார்களா ? கால் வலிக்க நடக்க முடியாமல் 20 கிலோமீட்டர் வந்து தாசில்தார் அலுவலக வாசலில் பிச்சை எடுப்பது போல நின்று கெஞ்சினேன் அப்போது மெய் மறந்து 
போனார்களா ? ஏழை மக்களின் வலியை உணராமல் இப்படி மாற்றி மாற்றி பேசும் அதிகாரிகளை இந்த அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தூக்கி எறிந்திட ! நடவடிக்கை எடுக்க நான் வணங்கும் சாமியாக கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களும் இறங்கி வருவார்களா ? என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட அரூர் விவசாயி கோரிக்கை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அரூர் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்து உள்ளார். வெல்லுட்டும் மானிட ஜனநாயகம் 


Comments