தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராம சமுதாய கூடத்தில் டாக்டர் BR.அம்பேத்கார் அரசு ஊழியர் நற்பணி இயக்கம் சார்பில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பென்கள் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் சுடர் விருதுகள் விழா நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராம சமுதாய கூடத்தில் டாக்டர் BR.அம்பேத்கார் அரசு ஊழியர் நற்பணி இயக்கம் சார்பில் பனிரெண்டாம்,  பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பென்கள் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் சுடர் விருதுகள் விழா நடைபெற்றது.இதில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் விருதுகள் மற்றும் பேனா, நோட் புத்தம்,காலேஜ் பேக் போன்ற பரிசுகள் வழங்கியும், திராவிட பேரரசர் தளபதி அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கும்,பள்ளி குழந்தைகளும்,பெண்களுக்கும் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையும் சாதனைகளையும் விளக்கி உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் சமூக செயற்பாட்டாளர் முனைவர்.எ.கொ.அம்பேத்கர்,முனைவர்.சிவபிரகாசம்,பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களை உற்சாகபடுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்கள்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி,ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,பொதுமக்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments