பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தவறுதலாக புரிந்து இருக்கிறார் - அமைச்சர் மா சுப்பிரமணியன் - எவிடென்ஸ் பார்வை

பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தவறுதலாக புரிந்து இருக்கிறார் - MBBD BDS படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களில் இருப்பிட சான்றுடன், அரசு ஒதுக்கீட்டு முதுகலை இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்- என மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு  CT ஸ்கேன் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை இயந்திரங்களை திறந்து வைத்தார். அதேபோல மாரண்டஅள்ளி, தீர்த்தமலை, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார பொது சுகாதார அழகு கட்டிடம் காணொளி மூலம் திறந்து வைத்தார்.  
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தவறுதலாக புரிந்துள்ளார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலோ தமிழகத்திற்கு வெளியிலோ இன்டன்ஷிப் காலம் உட்பட MBBD BDS படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களில் இருப்பிட சான்றுடன், அரசு ஒதுக்கீட்டு முதுகலை இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள். ஆனால் தகுதி உடையவர்கள் அல்ல என செய்தி பரவின. இதனால் மருத்துவம் படித்த மாணவர்களிடையே ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளன என்பதால் தான் இந்த மறுப்பு அறிக்கையை நாங்கள் தெரிவிக்கிறோம். 

எம்பிபிஎஸ் படித்தவர்கள் முதுகலை பட்டம் பெற வேண்டிய நோக்கத்தில் இருப்பவர்களிடையே ஒரு தவறுதலான புரிதலை ஏற்படுத்தியுள்ளன எனவும் பிற மாநிலங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் இன்டன்ஷிப் காலம் உட்பட எம் பி பி எஸ், பி டி எஸ் படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களில் உள்ள திறந்த வகை ஓபன் காம்பிடேஷன், அரசு ஒதுக்கீட்டு முதுகலை இடங்களுக்கு மட்டுமே தகுதி உடையவர்கள். இதை பொறுத்தவரை பிற மாநிலங்களுக்கு சொல்லப்பட்ட இந்த செய்தி தான் தமிழ்நாடு அரசுக்கு சொல்லப்பட்டதாக புரிந்து கொண்டுள்ளனர். இதனை மருத்துவ மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

MBBD BDS பொருத்தவரை கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்கள் 36,200 பேர், இந்த ஆண்டு விண்ணப்பித்தவர் 39 ஆயிரத்து 924 பேர் இதுவரை விண்ணப்பித்தவர்கள் 32649 பேர். கடந்த மாதத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்ட இந்த நிலையில் பெற்றோர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இரண்டு நாட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 12ஆம் தேதி  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாணவர்கள் விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் மிக விரைவில் மாநில அரசும், ஒன்றிய அரசும் கலந்தாய்வு ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இந்த கலந்தாய்விற்கான தேதி அடுத்த வாரத்தில் ஒன்றிய அரசு அறிவிப்பார்கள் என தெரிகிறது. அதேபோல தகுதியானவர்களின் பட்டியலை வருகிற 16-ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Comments