பொம்மிடி அருகே அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கோவிந்தசாமி எம்எல்ஏ!!!!!.... தலைமையில் பெண்கள் போராட்டம்

பொம்மிடி அருகே அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கோவிந்தசாமி எம்எல்ஏ தலைமையில் பெண்கள் போராட்டம்


 போலீசார் குவிப்பு

 பாப்பிரெட்டிப்பட்டி. ஜூலை, 27 -

 பொம்மிடி அருகே உள்ள பையர் நத்தம் கிராமத்தில் செயல்படும் அரசு மதுபான கடையை மூடக்கோரி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் பெண்கள் மதுபான கடையை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

 அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

 தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பையர் நத்தம் கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரம் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது

இந்த கடை மாவட்டத்தில் அதிக விற்பனையாகும் கடைகளில் ஒன்று

 இந்த மதுபான கடை ஊருக்கு மத்தியிலும் ,அரசு பள்ளிக்கு அருகிலும், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வருவதாகவும், குடிமக்களால் பள்ளி பிள்ளைகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறி இந்த கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்

 மாவட்ட நிர்வாகமும் பலமுறை இடமாற்றம் செய்கிறோம் என்று உறுதியளித்தும் இதுவரை இடமாற்ற நடவடிக்கை இல்லைஎன கூறி இன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மதியம் 12 மணியளவில் அரசு மதுபான கடையை திறக்க கூடாது எனக் கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இந்த போராட்டம் பெண்கள் தானாக முன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக ஆதரவு தெரிவித்தேன் என சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் கூறினார்.

இதை அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா,  பொம்மிடி காவல் ஆய்வாளர் பொறுப்பு நாகலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் 30க்கும் மேற்பட்ட இப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்


 சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக அரசு மதுபான கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது, அரசு மதுபான நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறையினர் ,காவல் துறையினர் ஆகியோர் போராட்டக்காரர்களிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த போராட்டத்திற்காக அ பள்ளிப்பட்டி பெண்களையும் வரவழைத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு சுற்றுப்புற பெண்களை ஒன்று சேர்த்து களத்தில் இறக்கிய நபர் வஜ்ரவேல் என்பது விசாரணையில் தெரியவந்தது

இச்சம்பவத்தால் பையர் நத்தம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

Comments