தர்மபுரி மாவட்டம் மாரியம்பட்டி கிராமத்தில் கம்பி வேலியில் மோதி மான் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் பருத்திக்காடு பகுதியில் இருந்து அருகில் உள்ள வாழத் தோப்பிற்கு கடந்து செல்ல வேகமாக ஓடி வந்ததால் மானின் தலையில் உள்ள கொம்பு வாழத் தோப்பிற்கு பாதுகாப்பாக சுற்றி அமைக்கப்பட்ட கம்பிவேலியில் அதிவேகமாக  மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மான் உயிரிழந்துள்ளது. இது பற்றி மாரியம்பட்டி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த பின்பு அ பள்ளிப்பட்டி வனத்துறை அதிகாரியான சாக்கன் சர்மா தலைமையில் மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ பள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Comments