மேல்மா-சிப்காட் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தை தடுக்க தமிழக அரசு சதியா?
மேல்மா சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம். மேலும் நாம் பெருமளவில் திரண்டு மாபெரும் ஊர்வலம் நடத்தி மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நமது நிலத்தை எக்காரணத்தைக் கொண்டும் வழங்க மாட்டோம் என்று தமிழக அரசுக்கு உறுதியாக பதிவு செய்துள்ளோம் .இந்நிலையில் மேல்மா சிப்காட் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தை தடுப்பதற்கு தமிழக அரசு சதி செய்ய உள்ளதாக அறிந்தோம்.
அப்படி சதி நடந்து தற்போது நடக்கும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் கலைக்கப்பட்டால் விவசாயிகள் அனைவரும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்!
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழங்கியுள்ள அமைதியான முறையில் போராடவும் நமக்கான இயக்கமாக செயல்பட வழங்கியுள்ள உரிமையின் படி ( "Right to Protest under article 19(1)(a) article 19(1)(b) article 19(1)(c) which gives the citizen the right to freedom of expression and the right to meet peacefully without weapons and right to form associations or trade union " )படி அமைதியான முறையில் நமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். ஆனால் அரசு இதை ஒடுக்க பல முயற்சிகள் எடுத்தும் முறியடிக்க முடியாமல் உள்ளது. ஆனால் முன் நிற்கும் விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போட தேவையான நிர்வாக மாற்றங்கள் செய்துள்ளதாக அறிந்தோம். அப்படி ஏதாவது நடந்தால் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இந்த காத்திருப்பு போராட்டத்தை தொடங்க விவசாயிகள் அனைவரும் தயாராக இருக்க வேண்டுகிறோம்.
அதோடு பிற ஜனநாயக சக்திகளையும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம்!
போராடுவோம்! வெல்வோம்!!
செய்தித் தொடர்பகம்
மேல்மா-சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள்-இயக்கம்
செல்பேசி- 97511 97578/95432 53229 Twitter: @
FB:@
Youtube Channel: https://www.youtube.com/channel/
மின்னஞ்சல்: @gmail.com
11, ஜூலை 2023.
Comments
Post a Comment