அரூர் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகளின் துணையோடு திருடு போன 40 கிலோ சந்தனை கட்டைகள் !!! சந்தனக்கட்டை திருட்டுக்கு பின்னால் யார் வலை வீசும் வனத்துறை அதிகாரி அப்பால நாயுடு


அரூர் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகளின் துணையோடு  திருடு போன 40 கிலோ சந்தனை கட்டைகள் !!! சந்தனக்கட்டை திருட்டுக்கு பின்னால் யார் வலை வீசும் வனத்துறை அதிகாரி அப்பால நாயுடு 

தருமபுரி மாவட்டம் அரூர் வனச்சரக அலுவலகத்தில் 20/07/2023 அன்று  இரவு ( 12.45 ) மணி அளவில் வனச்சரக  பொறியாளர் டி எஃப் ஓ அலுவலகத்தில் ஆறு சந்தன மரங்களை வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சம்பவம் அறிந்த அரூர் வனச்சரக காவல் அதிகாரிகள் பொறியாளர் டி எஃப்ஓ அலுவலகத்திற்கு சென்று வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் உடனடியாக இரவோடு இரவாக ஓசூரில் உள்ள  மோப்ப நாயை வரவழைத்து, சோதனையில் ஈடுபட்டனர். 
சந்தன மரங்கள் வெட்டப்பட்ட இடத்திலிருந்து செக்கம்பட்டி கிராமப்பகுதி வரைக்கும் மோப்பநாய் சென்றுள்ளது. அதற்குப் பிறகு மோப்பநாய் செல்லவில்லை,  உடனடியாக மோப்பநாய் எதுவரைக்கும் சென்றதோ அதுவரையில்  உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தற்போது வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றும் அரூர் காவல் நிலையத்திலும்  இது குறித்து புகார் அளித்துள்ளனர்.  

திருடனு போன அன்று"  இரவு பணியில் இருந்தவர் பி.கபிலன் என்று கூறப்படுகிறது. அன்று இரவு DFO அப்பால நாயுடு ஆத்தூர்  பகுதிக்கு கூடுதல் பணிக்கு சென்றதால், அவர் விடுமுறை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

வனப்பொறியல் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருக்கும் வில்லியம்ஸ் என்பவர் இரவு பணியில் அலுவலகத்தில் இருந்துள்ளார். இவருக்கு மட்டும்தான் DFO எப்போது வருவார் எப்போது வர மாட்டார் என்று  தெரியும் என கூறப்படுகிறது.

 DFO அலுவலகத்தின் வாசலின் கேட்டிற்கு அருகே 6 சந்தன மரத்தின் அடிப்பகுதியில் உள்ள 3 அடி மரங்களை வெட்டியுள்ளனர். வெட்டும்போது சத்தம் ஏதும் வந்திருக்காதா வாசலின் அருகிலே இது நடந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படடுத்துகிறது.
இதனால் சந்தேகத்தில் உள்ள அதிகாரிகள் வனத்துறை  அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் மரங்களை வெட்டிய திருடர்களுக்கும் தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என தற்பொழுது அரூர் வனச்சரக அதிகாரிகளான  அப்பாலு நாயுடு, தலைமையில் நீலகண்டன் , சரவணன் அவர்கள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மற்றும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளை  கேட்கும்போது சந்தன மரங்களை வெட்டிய நபர்களை இன்னும் ஒரு சில வாரங்களில் பிடித்து விடுவோம் திருடர்களின் அருகாமையில் நெருங்கி விட்டோம் விரைவில் திருடர்களை பிடிப்போம் என கூறியுள்ளனர்.

 சந்தன மரங்கள்  வெட்டப்பட்ட சம்பவம் அடுத்த நாள் மாலை தான்  உறிய அதிகாரிகளுக்கு தெரியும் என விசாரணையில் தெரியவருகிறது. அப்படி என்றால் சந்தன மரங்களை வெட்டிய நபர்களுக்கும் அரூர் மற்றும் மொரப்பூர்  வனச்சரக அலுவலத்திற்கும் தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

 திருடர்களை பிடித்த பின்புதான் தெரியும் வேலியே பயிரை மேய்ந்ததா இல்ல வேலியும் காவக்காரனும் சேர்ந்து மேய்ந்தார்களா என்று ??

Comments