புரோக்கர்களின் வலைக்குள் சிக்கிய அரூர் காவல் நிலையம்..! ஒரு வருடத்திற்கு 30 லட்சமா..!!!! சைடு பிசினஸ் - யார் அந்த காவல் அதிகாரி- ஆதாரத்துடன் டிஜிபி சங்கர் ஜிவாலை சந்திக்க போகும் எவிடன்ஸ் பார்வை
தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய காவல் நிலையமாக பேசப்பட்டு வருவது அரூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் தினந்தோறும் கோவில் வாசல்களில் எப்படி கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு நிற்பார்களோ அதுபோல ஒவ்வொரு நாளும் அரூர் காவல் நிலையத்தில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக நீதி கிடைக்கும் என்று நம்பி அரூர் காவல் நிலையத்தில் மக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.
இதனை பயன்படுத்தி அரூர் காவல் நிலையத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் ஆயிர கணக்கிலும் லட்சக்கணக்கிலும் கேஸ் இல்லாமல் பணங்களை பெற்று தருவதாக தகவல்கள் கசிந்தது.
இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கி அரூர் காவல்துறைக்கு பின் புலத்தில் எந்த புரோக்கர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால் ( தருண் ) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
என்பவர் முக்கிய புள்ளியாக இருக்கிறார் என அரூர் காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் புலம்பி வருகின்றனர். இது மட்டுமின்றி அரூர் DSP புகழேந்தி அவர்கள் நேர்மையாக செயல்பட்டு வருவதால் 100 க்கு மேல் இயங்கி கொண்டிருந்த சந்துகடைகளை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இதனால் பல சந்துகடைகள் இயங்குவதில்லை. Dsp நடவடிக்கையால் ஒரு வருமானமும் இல்லாமல் அரூர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் தலையில் அடித்து புலம்புகிறார்களாம்.
அதுமட்டுமின்றி காவலராகவும் ஓட்டுனராகவும் பணிபுரியும் (கஜினி) அவர்கள் தன்னுடைய நண்பனாக இருக்கும் (தருண்) பெயர் மாற்றப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் தினமும் பணி செய்வது போல் 8 மணி நேரம் வரை காத்திருப்பார் அதற்கு காவலர் கஜினி உதவியாக இருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி காவல் நிலையத்தில் பணி புரியும் முக்கிய அதிகாரி தற்போது ஓசூரில் உள்ள அமெரிக்கன் பெட்ரோல் பங்கின் அருகில் 5 பிளாட் வாங்கியுள்ளார் என்று ரகசிய தகவல்கள் வெளியானது. இதனை அவ்வபோது பார்வையிட புரோக்கரான தரூன் சென்று வருகிறார் என்கின்றனர். தருண் மூலமாகவும் காவலர் கஜினி மூலமாகவும் சந்துகடை, வைத்திருப்பவர்களிடம் பல ஆயிரக்கணக்கான பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக காவல் தரப்பில் கூறப்படுகிறது. தனிப்பிரிவு காவல்துறையினர் சந்து கடைகளை வைத்திருப்பவர்களை பிடித்து அரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அவர்களுக்கு சாதி ரீதியாகவே ஒரு சில காவல் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுவதாக தனிப்பிரிவு காவல் துறையினர் புலம்புகின்றனர்.
சந்து கடை வைத்திருக்கும் நபர்களை மறைமுகமாக வீடியோ எடுக்கும் பொழுது ஒவ்வொரு கடைக்கும் மாதம் நாங்கள் 7000 ரூபாய் கொடுக்கிறோம் 6000 ரூபாய் கொடுக்கிறோம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என சந்து கடை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இதைக் கேட்கும் பொழுது பேர் அதிர்ச்சியாக இருந்தது காரணம் அரசுடைய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளிலும் மாணவர்களின் நலனுக்காக காவல்துறை மூலமாக தமிழக அரசின் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.
மறுபக்கம் இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தும் காவல்துறையே ஒரு பக்கம் சந்து கடைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவது பேரதிர்ச்சியாகவும் எதிர்கால சமுதாய இளைஞர்களுக்கு பேரழிவாகவும் வழிகாட்டுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 65 கடைக்கு மேல் சந்து கடைகள் வைத்திருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தனி பிரிவு வட்டாரத்தில் கூறுகின்றனர். மாதம் 65 கடைக்கு 5000 என்று கணக்கிட்டால் 3 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் என்று கணக்கு விவரம் சொல்லுகிறது இது சந்து கடைகளுக்கு மட்டும் இதையே 12 மாதத்திற்கு கணக்கிட்டால் 39 லட்சமாக புள்ளி விவரம் தருகிறது. இதற்கு மறைமுகமாக அரூர் காவல் நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகள் ஆதரவாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கஜினி என்பவர் சீருடை அணியாமல் அதிகப்படியாக பணியில் இருந்து வருவது எல்லோரும் அறிந்த உண்மையே.
ஒரு சந்துகடைக்கு 7000 ரூபாய் வாங்குவதாகவும், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கும் வரும் நபர்களிடம் வழக்கு போடுவதற்கு ஒரு தொகையாகவும் வழக்கை வாபஸ் பெறுவதற்கும் வழக்கு போடாமல் இருப்பதற்கும் ஒரு தொகையாக நிர்ணயித்து 30 ஆயிரம் 25 ஆயிரம் என்று பேரம் பேசப்பட்டு லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.. இந்தத் தொகையை காவல் நிலையத்தில் உள்ளவர்கள் நேரடியாக வாங்குவதில்லை ஒரு சில அரசியல் நபர்களை வைத்து மற்றும் இடைத்தரகர்களை வைத்தும் அதாவது கஜினி மற்றும் தருண் அவர்களை வைத்தும் தங்களுடைய குடும்ப உறவில் இருக்கும் நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட வேண்டும் என்று ஒரு நிர்ணயம் அங்கு விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அப்படி சைடு தொழிலாக வாங்கப்பட்ட தொகை மட்டும் ஐந்து மாதத்தில் 7 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது அப்படி என்றால் வருடத்தில் இவர்கள் எந்தெந்த பகுதியில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி காவல்துறையின் நேர்மைய உடைத்து துஸ்பிரியோகம் செய்து பண பரிவர்த்தனை செய்வார்கள் என்று யோசிக்க வைக்கிறது..
இங்கு மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் உளவுத்துறை சார்ந்த அதிகாரியில் ஏன் காவல்துறைக்குள் நடக்கும் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று சக காவல்துறையினர் புலம்புகின்றனர். அதுமட்டுமில்லாமல் இது போன்று மக்களிடத்திலும் அரசுக்கு விரோதமாக செயல்படும் சந்து கடைகளிலும் பணங்களை பெற்று காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு சில காக்கி சட்டை போட்ட நபர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் இடைத்தரவு இடைத்தரகர்கள் மற்றும் அரசியல் நபர்கள் இவர்களுடைய தொடர்பு எண்களும் காவல்துறையில் உள்ள ஒரு சில நபர்களின் தொடர்பு எண்களையும் வைத்து மறைமுகமாக விசாரணை நடத்தினால் உண்மையான வெளிச்சம் காவல் துறைக்கான நேர்மையும் கிடைக்கும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து சுமார் ஒரு வருடமாக காவல்துறைக்கும் காவல்துறையிலுள்ள நபர்களுக்கும் யார் இடைத்தரகர்கள் என்று ஆய்வு செய்த பின்பு முழுமையான ஆதாரங்கள் கிடைத்ததின் வெற்றியோடு தற்பொழுது புதிதாக பதவி ஏற்ற மரியாதைக்குரிய டிஜிபி சங்கர் ஜிவால் அவர்களை சந்திக்க இருக்கிறது எவிடன்ஸ் பார்வை செய்தி நிறுவனம். விரைவில் ஆதாரத்தோடு உண்மை தன்மைகள் வெளிவரும் வரைக்கும் ஆதாரங்களை திரட்டும் எவிடன்ஸ் பார்வை
Comments
Post a Comment