கரூர் அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொட்டி மற்றும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், மாணவர்கள் பயன்படுத்தும் 3 குடிநீர் தொட்டிகளில் கெமிக்கல் கலந்து சென்றால் பரபரப்பு - சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொட்டி மற்றும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், மாணவர்கள் பயன்படுத்தும் 3 குடிநீர் தொட்டிகளில் கெமிக்கல் கலந்து சென்றால் பரபரப்பு - சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 162 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 8 ஆசிரிய, ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் பள்ளி வகுப்பறை முன்பு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த அழங்காரச் செடிகள் ஒடிக்கப்பட்டும், பள்ளி வளாகத்தில் வைக்கபட்டிருந்த 10க்கும் மேற்பட்ட அழகுச் செடிகள் உடைந்தும் காணப்பட்டன. மேலும், ஆசிரியர்கள் கழிவறையை சென்று பார்த்த போது அதன் பூட்டு உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பினாயில், கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட் உள்ளிட்ட பாட்டில்கள் மாயமாகி இருந்தன. பள்ளி வளாகத்தில் இருந்த 3 குடிநீர் தொட்டிகளை பார்த்த போதும், அதன் தண்ணீரை பிடித்து பார்த்த போது அதில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேசுராஜ் சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுனர்களுடன் வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் 3 குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டு சுமூக பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோவில் திறக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment