அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் அரூர் வட்ட சட்ட பணிகள் குழு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் 11-07-2023 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் அரூர் வட்ட சட்ட பணிகள் குழு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் 11-07-2023 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் குமார் தலைமை தாங்கினார். அரூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ரேவதி மாணவர்களிடையே கேலிவதைத் தடுப்பு சட்டவிதிகளைப் பற்றியும், வட்ட சட்ட பணிகள் மூலமாக ஏழை எளியோருக்கு வழங்கப்படும் இலவச சட்ட உதவிகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோபிநாத் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

Comments