நம்ம கவர்ன்மென்ட் எதுவும் செய்றதில்லன்னு சொல்லி தருமபுரி திமுக எம் பி அப்ருவர் ஆகுறார் - MLA கோவிந்தசாமி தடாலடி !

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்களின் நிதியிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட இருளப்பட்டி கல்லாத்துக்காடு அ.பள்ளிப்பட்டி போன்ற இடங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் 12 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள ஶ்ரீ மாரியம்மன் கோவில் முன்பு 32 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் நீர்த்தொட்டி அமைக்கும் திட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர். பிறகு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் 989000 மதிப்பீட்டில் புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம் மற்றும்  மதிப்பில் டயாலிஸஸ் யூனிட்டிற்கு 8 லட்சம் RO PLANT இயந்திரத்தை துவங்கி வைத்து மருத்துவமனைகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை  சந்தித்த சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்து போது தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி செந்தில் குமார் அவர்கள் அரசு திட்டங்களை செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு கீழ் இயங்கும் அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என குற்றம் சாட்டுகிறார் இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு அரசு ஊழியர்கள் யாருக்கு கீழ் இருக்கு !  இந்த ஆட்சியில அப்படித்தான இருக்கும் அவரே ஒதுக்குறாரு நம்ம கவர்மெண்ட் எதுவும் செய்றதில்லனும் அவரே சொல்லி அவரே அப்ருவர் ஆகுறாரு என்று ரைட்டுன்னூ கிளம்பிட்டார் பாப்பிரெட்டிப்பட்டி MLA கோவிந்தசாமி 

Comments