தருமபுரியில் களத்தில் இறங்கப்போகும் அமலாக்கத்துறை !!! பாஜக அரசு அதிமுக கட்சிக்கு மறைமுகமாக அடிக்கும் எச்சரிக்கை மணியா

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில் திமுக கட்சியைச் சார்ந்த மின்சார துறை அமைச்சர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை படித்து வருகிறது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து திமுக கட்சி தரப்பில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றனர். மறுபக்கம் அமலாக்கத்துறை சோதனைக்கு ஆதரவாக தமிழக பாஜக மற்றும், அதிமுக , நாம் தமிழர் கட்சிகள் வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை சார்ந்த நட்பு வட்டாரங்களில் யாரிடமாவது இவருடைய சொத்து ரீதியான கோப்புகள் மறைக்க வைக்கப்பட்டுள்ளதா அல்லது மாவட்ட ரீதியாக ஒவ்வொரு மதுக்கடையிலும் வாங்கப்படும் பணம் தருமபுரி சேலம் கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் சென்ற நிலையில் தற்போது அமலாக்கத்துறை தர்மபுரி மாவட்டத்தை 360 டிகிரி சுற்றளவில் உட்று நோக்கி அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி சேலம் போன்ற இடங்களில் எத்தனை கோடிகள் கிடைக்கும் என்று பாஜக கட்சி, மட்டுமில்ல திமுக, அதிமுக கட்சி வட்டாரத்திலும் கூட  அலசல் புலசலாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபற்றி திமுக நிர்வாகிகளிடம் கேட்கும்போது 
இது திமுகவை மிரட்டுவதாக பேசப்பட்டு வருகிறது அது அம்பட்டமான் பொய்,  இது பாஜக மறைமுகமாக எங்களுக்கு சீட்டு அதிகம் கொடுக்கவில்லை என்றால் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கும் இதுதான் கதி  என எச்சரிக்கை அறிகுறிகள் தான் என்கின்றனர்.

Comments