விஜய் கொடுத்த சாப்பாடு சூடா இருக்கு குழந்தைக்கு ஊதி ஊதி சாப்பாடு ஊட்டிய தாய், அரசியலின் பசியை எப்போது துடைப்பார் விஜய்?

விஜய் கொடுத்த சாப்பாடு சூடா இருக்கு குழந்தைக்கு  ஊதி ஊதி சாப்பாடு ஊட்டிய தாய், 


நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் உலக பட்டினி தினத்தன்று பசி எனும் பிணி போக்கிட  நல்ல பசி எடுக்கும் மதிய வேளையில் உணவை வழங்கியதால்,300 மேற்பட்ட பொது மக்களுக்கும் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளுக்கும் உணவுகள் கொடுக்கப்பட்டது. அப்போது விஜய்க்கு முத்தமிட்டவாறு கண் திருஷ்டி செய்து நடிகர் விஜய் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் சாப்பாடு வாங்கி இருக்கையில் அமர்ந்த தாய் ஒருவர் சூடா இருக்கும் சாப்பாட்டை ஊதி ஊதி  கொடுத்து தன் பிஞ்சு குழந்தையின் பசியை ஆற்றினார். இதை பார்க்கும் போது பல்வேறு இடங்களில் சரியான நேரத்திற்கு உணவின்றி தவிக்கும் மக்கள் படும் பாடு நன்றாகவே தெரிகிறது. ஒரு நேரத்திற்கு மக்களின் பசியை போற்றும் விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஒரு மாற்றத்தை கொடுத்து மக்களின் வளர்ச்சிக்கான பசியை எப்போது விஜய் போக்குவார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments