பூதநத்தத்தில் ஆரம்ப சுகாதாரம் பேரு பாப்பிரெட்டிப்பட்டியில் மருத்துவம் பாரு மருந்து இல்லாமல் போனதால் போனது பச்சிலம் உயிரு ! எப்பதான் இந்த ஊருக்கு மருத்துவ விடியல்?

தருமபுரி மாவட்டத்தில் முக்கியமான விவசாய பகுதியாக இருக்கும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அடிக்கடி நெஞ்சுவலி காரணமாகவும், மூச்சி திணறல் காரணமாகவும் பொதுமக்களுக்கு  சரியான மருத்துவம் மருத்துவம் கிடைக்கும் என்று நம்பி மருத்துவமனைக்கு வந்த உடன் சரியான சிகிச்சை இல்லாமல் இறந்து விடும் நிலை அவ்வபோது 
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவமனையிலும் அதனை சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி விச பூச்சிகள் கடித்தாலும் அதற்கு இங்கு சிகிச்சைக்கான மருந்துகள் இல்லை என்று இன்று நடந்த பரபரப்பான நிலையில் மருத்துவர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்ற இப்பகுதியில் இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் முதல்வரிடம் கூறி தரம் உயர்ந்த  மருத்துவ வசதியை  ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இப்படி மக்கள் கோரிக்கை வைக்க காரணம்  பாப்பிரெட்டிப்பட்டி 
வட்டம் மெணசி கிராமத்தில் குடியிருந்து வரும் புகழேந்தி என்பவரின் இரண்டாவது மகள் சஸ்மிதா வயது 3 நேற்று மாலை 4 மணியளவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாம்பு கடித்த சூழலில் குழந்தையை மீட்டு பூநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கே மருந்து இல்லை என சுகாதார நிலைய மருத்துவர்கள் அலட்சியமாக கூறியதால் அங்கிருந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கேயும் மருந்து இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து தர்மபுரி தலைமை  எடுத்துச் செல்லும்போது வழியில் குழந்தை பரிதாபமாக இருந்தது இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மருத்துவமனையை முற்றிக்கிட்டு மருத்துவர்கள் மீதும் செவிலியர்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments