தருமபுரி மாவட்டம் அரூர் அருகே திமுக கவுன்சிலரின் 12 பவுன் நகையையும் 50 ஆய்யிரம் பணத்தையும் ஆட்டைய போட்ட காவி வேஷ்டி கட்டிய ( மாறு வேட )திருடர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே திமுக கவுன்சிலரின் 12 பவுன் நகையையும் 50 ஆய்யிரம் பணத்தையும்  ஆட்டைய போட்ட காவி வேஷ்டி கட்டிய ( மாறு வேட )திருடர்கள்
தருமபுரி மாவட்டம் அரூரில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அவதாரம் எடுத்து விட்டன. அரூர் சுற்று பகுதிகளில் கண்காணிப்பு காமிரா இருந்தும் 12 பவுன் நகை 50 ஆயிரம் பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
 அரூர் 7 வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ஜெயலட்சுமியின்  கணவர் வெங்கடேசன் என்பவர் அரூர் நான்கு ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் இருந்து தனது 12 பவுன் நகையையும், 50000 ஆயிரம் பணத்தையும் தனது இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு கொஞ்சம் தூரம் உள்ள தனது நண்பரின் கடைக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அவர் உள்ளே சென்ற ஒரு நிமிடத்திற்குள் அவரை பின் தொடர்ந்து வந்த காவி வேஷ்டி கட்டிய 
நபர் ஒருவர் தங்களின் கூட்டாகளிகளுக்கு தகவல் கொடுத்து ஸ்கூட்டியின் சீட்டுகடியில் வைக்கப்பட்ட பணத்தையும் 12 பவுன் நகையயும் கொள்ளையடித்து செல்லும் CCTV காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் மற்றும் நகை திருடுபோனதை கண்டு அதிர்ச்சியான 
வெங்கடேசன் அரூர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments