தேர்வெழுதும் மாணவனுக்கு முத்தமிட்ட தாய், சந்தோசமான செய்தி சொல்லணும் சாக்லேட் வழங்கி ஆசிர்வாதம் செய்த ஆசிரியர்

தேர்வெழுதும் மாணவனுக்கு முத்தமிட்ட தாய், சந்தோசமான செய்தி சொல்லணும் சாக்லேட் வழங்கி ஆசிர்வாதம் செய்த ஆசிரியர் 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இன்று   தொடங்குகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் 7 ஆயிரத்துக்கும் கூடுதலான பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில்  மட்டும் சுமார் 82 தேர்வு மையங்களில் மொத்தம் 22,757 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தனர்.இதனைத்தொடர்ந்து அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியர் சாக்லேட் வழங்கி சந்தோசமான செய்தி சொல்லணும் என்று ஆனந்த மகிழ்ச்சியில் வாழ்த்துக்கள் கூறினார். ஒரு பக்கம் தேர்வெழுதும் தன்னுடைய மகனுக்கு அப்பாவும் அம்மாவும் மகனின் கன்னத்தில் முத்தமிட்டு சந்தோசத்தில் மகிழ்ந்து தைரியமாக இரு பயப்படாதே என்று வாழ்த்துக்கள் கூற மாணவனும் நான் ஏன் பயப்பட போறேன் என்று தேர்வெழுத சென்றார் அந்த மாணவன் 

Comments