கோவை மாவட்டம் தடாகம் சாலை, சிவாஜி காலனி, இடையர்பாளையம், கணுவாய், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் எழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க கோரி மனு,

கோவை மாவட்டம் தடாகம் சாலை, சிவாஜி காலனி, இடையர்பாளையம், கணுவாய், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் எழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க கோரி மனு,




கோவை மாவட்டம் தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் இன்று கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை வட்டாட்சியர் லட்சுமி நாராயணனிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக, இணைக்க பட்ட வீட்டுமனை பட்டா விண்ணப்பங்களை வழங்கினர், முன்னதாக, வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை உடனடியாக வழங்க கோரியும், புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க கோரியும், அவ்வாறு வழங்கப்படும் பட்டாக்களுக்கான இடத்தை, முறையாக அளந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற பதாகைகளை ஏந்தியவாறு அலுவலகத்தின் முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் மணி முருகன், பொதுமக்களான 
ரங்கம்மாள், சந்தியா, ஜெயந்தி, ராதா மணி, புவணா, புவனேஸ்வரி, சந்தோஷ், வழக்கறிஞர் குமாஸ்தா லட்சுமி என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments