தர்மபுரி பென்னாகரம் ரோடு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டி கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தர்மபுரி பென்னாகரம் ரோடு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டி கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தருமபுரி அருகே பென்னாகரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் ஓட்டி, லாரி பார்க்கிங் ஏரியா உள்ளது. இந்த பார்க்கிங் ஓட்டியிருக்கும், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தி திறந்த வெளியில், மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டபட்டு சிதறி கிடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மருத்துவமனைகளில் மருத்துவ உபயோகத்திற்கு பிறகு அரசு விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக அகற்றி அழிக்க வேண்டிய மருத்துவ கழிவுகளான, சிரஞ்சுகள், ஊசிகள், டியூப்புகள், பேண்டேஜ் துணிகள், ரத்தம் துடைக்கப்பட்ட பஞ்சுகள், மருந்து காலி பாட்டில்கள், கை மற்றும் காலுறைகள், இது தவிர பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், கண்ணாடி பாட்டில்கள், உயிர் திசுக்கள் உள்ளிட்ட பலவிதமான கழிவுகளை, மூட்டை மூட்டையாக கட்டப்பட்டு திறந்த வெளியில் சாலையோரம் வீசி சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது,
கொட்டப்பட்டிருக்கும் மருத்துவ கழிவுகளில் தருமபுரி நகரில் இயங்கி வரும், மீனாட்சி தனியார் மருத்துவமனையின், மருத்துவமனைக்கான மருத்துவ சீட்டுகள், மருந்து குறிப்புகள், ஸ்கேன் ரசீதுகள், உள்ளிட்டவைகள் குப்பையோடு குப்பையாக சிதறி கிடப்பதை பார்க்கும் பொழுது சம்மந்தபட்ட மருத்துவமனைகளில் இருந்து இரவோடு இரவாக கொண்டு வந்து கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் தான் இவை என்பது தெள்ள தெளிவாக தெரிய வந்திருக்கிறது,
அரசின் விதிகளை பின்பற்றி மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக அகற்றி அழிக்க வேண்டிய மருத்துவக்கழிவுகளை, பல்வேறு நோய் தொற்று பரப்பும் வகையிலும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், திறந்த வெளியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக மருத்துவ கழிவுகளை கொட்டிச்செல்லும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையோரம் ஆங்காங்கே கொட்டப்பட்டிருக்கும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக அழிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க முன் வருமா?
Comments
Post a Comment