யானை இறப்புக்கு மின்சாரதுறையின் கவனக்குறைவே காரணம் - அது மனிதர்களுக்கும் ஆபத்தான பகுதியானது மக்கள் குரலாக வனத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு

வனத்துறை பணியாளர்கள் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த GPS கருவி உதவியுடன் அதன் நடமாட்டத்தை இரவு பகலாக தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் காட்டிற்குள் விரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்து GPS belt கழன்றுவிட்டதால் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து யானையை காட்டிற்குள் விரட்டுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் யானை ஆக்ரோசமான நிலையில் காணப்பட்டது. இது தொடர்பாகவும் யானையின் நடமாட்டம் குறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மேற்படி ஒற்றை ஆண் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட அறிவுரைகள் பெறப்பட்டது.அதனடிப்படையில் ஒசூர் வனக்கோட்ட கால்நடை உதவி மருத்துவரின் உதவியுடன் யானையை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த 17-03-2023ஆம் தேதியன்று வனப்பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த மேற்படி ஒற்றை ஆண் யானை பாலக்கோடு வனச்சரகம், பனைக்குளம் காப்புக்காட்டு பகுதியிலிருந்து கிட்டப்பட்டி கிராம அருகே வெளியேறி சுமார் 50 கிலோமீட்டர் பயணித்து தருமபுரி-ஓசூர் நெடுஞ்சாலை, பெங்களூரு-கோயமுத்தூர் நெடுஞ்சாலை மற்றும் தருமபுரி‑திருப்பத்தூர் நெடுஞ்சாலை ஆகியவற்றை கடந்து கிழக்கு நோக்கி மொரப்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிக்கு இடைநில்லாமல் தொடர்ந்து பயணித்து வந்த யானையை வனப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் காவல் துறை உதவியுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் யானை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் 18-03-2023ஆம் தேதியன்று காலை சுமார் 9.30 மணியளவில் தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம், பூதநத்தம் பிரிவு, ஓடசல்பட்டி வனக்காவல் சுற்று, காரியமங்கலம் வட்டம், திப்பம்பட்டி கூட்ரோட்டில் இருந்து கம்பைநல்லூர் வழியாக கெலவள்ளி கிராமத்தின் அருகே சென்ற ஒற்றை ஆண் யானையானது பட்டா நிலத்திலிருந்து அருகிலிருந்த ஏரிகரையின் மீது ஏறியபோது அருகிலிருந்து மின்கம்பியில் உரசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. (GPS அளவீடுகள் N12.225428, E78.332613) இறந்த யானையின் உயரம் 290 செ.மீ. மற்றும் மின் கம்பி அமைக்கப்பட்டிருந்த உயரம் நிலத்திலிருந்து 265 செ.மீ. ஆகும். எனவே யானை ஏரிகரையின் மீது ஏறியபோது மின்கம்பியில் உரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இறந்த ஆண் யானையின் சடலம் கைப்பற்றப்பட்டு கால்நடை மருத்துவரின் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான காரணம் குறித்து கேட்ட போது இந்த யானையின் மரணத்திற்கு முழு காரணம் மின் வாரிய துறையும் ஒன்று, கண்டிப்பாக அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும். காரணம் அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் எதாவது குச்சியோ, இரும்பு கம்பி பொறுத்தப்பட்ட கொக்கியோ எடுத்து சென்றிருந்தால் மனிதர்களுக்கும் இந்த நிலை உருவாகியிருக்கும். பல்வேறு இடங்களில் மின்சார கம்பி உறைந்து கரும்பு பயிர்கள்  தீயாக கருகிய நிலமையை பார்த்திருப்போம், வைக்கோல் ஏற்றி வந்த வாகனம் தீ பிடித்து எறிந்தது என்று செய்தித்தாள்களில் வந்ததை பார்த்திருப்போம்  இதை எதிர்த்து மக்கள் மின்சாரதுறையிடம் மின் கம்பிகளை உயரமாக இழுத்து கட்ட கோரிக்கை வைத்தாலும் அவர்களின் கவனக்குறைவால் ஆங்காங்கே இது போன்ற உயிரழப்புகள் பொருள் சேதங்கள் உருவாகிறது என்று வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண மக்கள் தெருவிளக்கு பிரச்சனை  என்றாலே மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்க வேண்டிய நிலை தருமபுரி மாவட்டத்தில் நீடித்து வருகின்றன, இதற்கு யார் களம் இறங்கி நடவடிக்கை எடுப்பார் ? என்பதே சமூக ஆர்வலர்களின்  கேள்வி   

Comments