தருமபுரி பட்டாசு குடோன் வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் பலி

தருமபுரி பட்டாசு குடோன் வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் பலி 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியில் சரவணன் என்வருக்கு சொந்தமான பாட்டாசு குடோன் இயங்கி வருகிறது. திருவிழாக் காலங்களில் நாட்டு வகை பட்டாசு தயாரித்து வந்த நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள், என இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments