தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் விளையாட்டு போட்டி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர்களையும், மாணவ மாணவியரையும் ஊக்கப்படுத்தும் வகையில் கைப்பந்து, கிரிக்கெட் ,இறகு பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் ஒன்றியம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக பையர் நத்தம் அம்பேத்கர் கைப்பந்து கழகம் ஏற்பாட்டின் பேரில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இரண்டு நாட்களாக நடைபெறும் கைப்பந்து போட்டியினை திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் சரவணன் துவக்கி தலைமைதாக்கி துவங்கி வைத்து மாணவர்களை உற்சாகமூட்டினார்
இந்த விழாவில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு இறுதி போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும்,கோப்பைகளையும் வழங்கினார்,சிறப்பாக விளையாடிய மாற்று திறனாளி இளைஞர் ஒருவருக்கு சிறப்பு பரிசையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பி.பள்ளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் திருமலாதினேஷ்,ஒன்றிய கழக துணை செயலாளர்கள் வே.செல்வன்,ஜாகிதாசெரீப்,கிளைகழக செயலாளர்கள் சங்கர்,ஆசிரியர் மணோகரன்,திவாகர்,பெரியசாமி,பூகார வெங்கடேசன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் விளையாட்டு போட்டியில் கிருஷ்ணகிரி,சேலம், மாவட்டங்களிலிருந்து வந்த அணிகள் உற்சாகமுடன் கலந்து கொண்டனர்.

Comments