அரசு அதிகாரிகள் வந்தால் காலை வெட்டுவோம் என மிரட்டிய நிலச்சுரண்டல் மாஃபியா ! துரிஞ்சிபட்டி அர்ஜூனன் தருமபுரி பொம்மிடியில் பரபரப்பு ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை

அரசு அதிகாரிகள் வந்தால் காலை வெட்டுவோம் என மிரட்டிய நிலச்சுரண்டல் மாஃபியா ! துரிஞ்சிபட்டி அர்ஜூனன் தருமபுரி பொம்மிடியில் பரபரப்பு ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை 


அரசு அதிகாரிகளின் தடுமாற்ற செயலால் வேலையின்றி தவிக்கும் 300  பெண்கள்  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !   

100 நாள் வேலை செய்யும் பெண்களால் பொம்மிடி ஊராட்சியில்  நடந்த பரபரப்பான சம்பவம் 


தருமபுரி மாவட்டம் பொம்மிடி முதல்நிலை  ஊராட்சிக்குட்பட்ட சுமார் 350  பெண்கள்  மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணிகளில் தினந்தோறும்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக சுமார் ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டில் பொம்மிடி ஊராட்சியை அடுத்த கோட்டமேடு  பகுதியில்  வட்டார வளர்ச்சி  அலுவலர், கிராம அலுவலர், ஊராட்சி மன்றத்தலைவர், 300 க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை செய்யும்  பெண்கள் சேர்ந்து  24 ஏக்கர் கொண்ட மேச்சல் புறம்போக்கு நிலத்தில் பூமி பூஜை செய்துள்ளனர்.


 அப்போது திடிரென்று அப்பகுதியில் இருந்த அர்ஜுனன் என்பவர் இது என்னுடைய நிலம் நீங்க எப்படி இங்க் பூமி பூஜ போடலாம், என வாக்குவாதத்தில் ஈடுபட்டு யாராவது நிலத்தில் காலை வைத்தால் காலையே வெட்டுவேன்னு என அங்கிருந்த 100 நாள் வேலை செய்யும் பெண்களையும் அதிகாரிகளையும் மிரட்டியுள்ளார். 


இந்த சம்பவத்தைக்கண்ட அதிகாரிகள் கிராம அலுவலரிடம் 24 ஏக்கர் நிலத்தை பற்றி கேக்கும்போது  24 ஏக்கர் நிலமும்  ஆக்கரிமிப்பு செய்யப்பட்ட அரசு  நிலம்தான் என  கிராம அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மீண்டும் நிலத்தை ஆக்கரிமிப்பு செய்த அதிகாரிகளிடம் கேட்ட போது சரியான பதில் கூறாமல் மீண்டும் மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். இதனால் செய்கை தெரியாமல் திகைத்த நின்ற அதிகாரிகள் பூமி பூஜை செய்யாமல் திரும்பிச்சென்றனர் . 

அரசு அதிகாரிகள் சரியாக திட்டமிட்டு இந்த பகுதியில் 100 நாள் வேலை செய்யவேண்டும் என முடிவு செய்து அந்த பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துளார்களா அப்படி இருக்குமானல் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் இது போன்ற நிலைகள் வந்திருக்காது. அதிகாரிகள் ஆதிக்கம் கொண்ட நபர்களை கண்டு அஞ்சுவதால் இது போன்ற நில சுரண்டல் ஏற்படுகிறது. 24 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தால் அந்த நிலத்தில் சுமார் 1500 மாடுகள் ஆடுகள் போன்ற உயிரினங்களுக்கு மேய்ச்சல் நிலமாக பயன்படும் ஆனால் இங்கே ஒரு சில அதிகாரிகள் கிராம அலுவலர்கள் கண்டு கொள்ளாததால் இந்த நில சுரண்டல் ஏற்படுகிறது என்று மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தற்போது மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணிகளின்  வேலைக்கு செல்லமுடியாமல் உயிருக்கு பயந்துகொண்டு 100 நாள் வேலை செய்யும் பெண்கள் தற்போது பொம்மிடி முதல்நிலை  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்து செல்கின்றனர்.


 இதுகுறித்து 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் கூறுகையில் ஆக்கரிமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டு எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் அதுமட்டுமின்றி அர்ஜுனன் என்பவரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments