தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் PA பொம்மிடி காவல் நிலையத்தில் ரவுடிசம்!!!! - பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் !!!! வீடியோ கீழே உள்ளது




தருமபுரி திமுக மேற்கு  மாவட்ட செயலாளர் பழனியப்பன் PA பொம்மிடி காவல் நிலையத்தில் ரவுடிசம்!!!! - பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் !!!!


தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள B. பள்ளிபட்டி கிராமத்தில் வசிக்கும் நவீன் குமார் என்பவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு வசந்தகுமார் என்பவரிடமிருந்து 25 சென்ட் நிலத்தை வாங்குகிறார். மற்றும் அதற்கு அருகே உள்ள நிலத்தை சக்ரவர்த்தி சௌமியா என்பவரிடமிருந்து ஜீத், சுமதி, சக்தி, ராகுல், பாலகிருஷ்ணன், ஆகியோர் நிலம் வாங்கியுள்ளனர். இவர்கள் வாங்கிய நிலத்தில் சக்ரவர்த்தி சௌமியா கரும்பு சாகுபடி செய்திருந்த நிலையில் இதனை அறுவடை செய்து விட்டு நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று நிலம் வாங்கிய நபர்களிடம் வாக்குறுதி கொடுத்துள்ளனர். 



சௌமியா சக்கரவர்த்தி !. பிறகு ஆறு மாதம் கழித்து நில அளவையர் நிலத்தை அளக்கும்போது தருமபுரி மேற்கு  மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் PA பொன்மணி என்பவர் தானாக முன் வந்து நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார் என்பது கள ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக ஏற்காட்டில் உள்ள தனது நிலத்தை விற்ற பொன்மணி என்பவர் சக்ரவர்த்தி சௌமியா விற்ற நிலத்தை கையகம் செய்வதற்காக முயன்று வந்துள்ளார். 


இதனால் சக்கரவர்த்தி சௌமியா அவர்கள் பணம் வாங்கிவிட்டு நிலத்தை விற்ற பின்னர் தற்போது நீ கொடுத்த பணத்தை தந்துவிடுகிறேன் என்னுடைய நிலத்தை கொடு என்று திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் PA பொன்மணி அவர்களின் ஆதரவில் நவீன்குமார், ஜீத், ராகுல், சுமதி, சக்தி என்பர்களை மிரட்டி வந்துள்ளனர். 


 இந்த சம்பவம் பழனியப்பன் அவர்களின் பெயரை கெடுக்க கூட இருப்பவர்களே இருப்பது வேதனையை உருவாக்கியது என்று பாதிக்கப்பட்ட மக்களும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்களின் தொண்டர்களும் புலம்பி வருகின்றனர்.  இதுகுறித்து  பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் காவல் துறை விசாரணையின் போது தருமபுரி திமுக மேற்கு  மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் PA பொன்மணி என்பவர் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 












இது பற்றி பொம்மிடி காவல்துறை கூறுகையில் எல்லாம் ஆளுங்கட்சி யா இருக்காங்க சார் எதுக்கெடுத்தாலும் மாவட்ட செயலாளர் பழனியப்பன் சார சொல்றாங்க நாங்க என்ன செய்வதென்று தெரியல என்று காவல்துறை புலம்புகின்றனர். 

பாதிக்கப்பட்ட நவீன் குமார் என்பவரிடம் கேட்கும்போது ஸார் தருமபுரி திமுக மேற்கு  மாவட்ட செயலாளர் பழனியப்பன் அண்ணா தான் என்னைய படிக்க வச்சாங்க ஆனா அவர பேர சொல்லி ஆதிக்கம் செஞ்சிட்டு வராங்க ஸார் காவல் நிலையத்தில் இந்த மாதிரி பன்றங்கனா வெளியே இருந்தா சும்மா விடுவார்களா என்னோட மனைவி தனியா இருக்காங்க நான் பெங்களூரில் இருக்கேன் என்னுடைய மனைவியை எதாவது செஞ்சிடுவாங்குண்ணும் பயமா இருக்கு ஸார்  அந்த வீடியோவ நீங்களே பாருங்க ஸார் என்று புலம்பி தவித்தார் நவீன் குமார். 

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் கடந்த நிலையில் தற்போது மாற்று கட்சியில் இருந்து வருவோருக்கு நல்ல பொறுப்புகளை கொடுத்திருந்தாலும் அந்த பொறுப்பை வைத்து சாதாரண மக்களை மிரட்டி கொள்ளை அடிக்க ஒரு சில தொண்டர்கள் முயலுவது தருமபுரி திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments