கடத்தூர் அருகே தருமபுரி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி பேருந்து வேகத்தால் பறிபோன தந்தை, மகளின் உயிர் !!!....


தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 400 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள்  
தருமபுரி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர்.  தருமபுரியில் இருந்து மாணவிகளை  கல்லூரி பேருந்து மூலமாகத்தான் கல்லூரிக்கு  அழைத்துச்செல்லப்டுகிறது.

 மீண்டும் மாலை கல்லூரி பேருந்து மூலமாக மாணவிகளை தங்கள் பகுதிகளில் நேரத்தில் இறக்கிவிட  வேண்டும் என்ற நோக்கத்தில்  அசுரவேகத்தில் 


தருமபுரி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி பேருந்து சென்றுள்ளது. 





அப்போது  தனியார் பள்ளி வேனை கடந்து செல்ல முயலும்போது,  இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கடத்தூர் பேருராட்சியில் கடைகள் மற்றும் வானங்களுக்கான சுங்க வரி வசூலிக்கும் ஒப்பந்ததரார்  கர்ணன் அவரது மகள்  சாசிகா  சம்பவ இடத்திலேயே விபத்தில்  உயிர் பிரிந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் தப்பித்துவிட்டார். 

இதுபற்றி கடத்தூர் மக்கள் கூறுகையில் இந்த காலேஜ் பஸ் பயங்கர வேகமாகத்தான் சார் வந்துச்சி,  இந்த பஸ் மட்டுமல்ல பல தனியார் பள்ளி பேருந்தும் கூட இப்படித்தான் எப்பவுமே  வேகமா வராங்க சார்,   இந்த பகுதியில  சாலை ஓரத்தில் மதுபான கடை இருப்பதால் கூட்ட நெரிசலும் ஒருசில நேரத்தில் அதிகம் உள்ளது.

 இந்த சாலை ஓரத்துல பாருங்க சார் பஸ்ஸ முற்ற மாதிரி மரம் இருக்கு  இதுவரையில் நெடுஞ்சாலைத்துறை இந்த மரத்த எடுக்குல,  இப்படி பட்ட ஆட்களால ஒதுக்கபுறமாக நின்று கொண்டிருந்த அப்பனும் புள்ளையுமே போய்ட்டாங்களே சார் என விபத்தை பார்த்த பொதுமக்கள கண்ணீருடன் தங்களின் ஆதங்கத்தை கூறுகின்றனர்.  விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மீதும் சாலையை சீரமைக்காமல் இருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று   பாதிக்கப்பட்ட கடத்தூர் மக்கள் 

கேள்வி எழுப்புகின்றனர்.

 

Comments