திமுக ஆட்சியை நாசமாக்கி வரும் அரூர் - பாப்பிரெட்டிப்பட்டி BDO க்கள் - செய்தி அல்ல நிஜம் ! பெட்டி, புட்டி, குட்டி, விஜயகாந்த் வசனம் போல்
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராமப்புற பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் தெரு விளக்கு பாதை வசதி உள்ளிட்ட மனுக்களை தமிழக. முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தபால் மற்றும் ஆன்லைன் வாயிலாக கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தவறான தகவல் அளிக்கும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசுக்கு தெரிய படுத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட மக்களின் குறைகள் குறித்து அரசு அனைத்து துறை அலுவலர்களுக்கும் தமிழக அரசின் மூலம் தொடர்பு எண் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட நிலையில் அரசு வழங்கப்பட்ட தொடர்பு எண் பயன்படுத்தப்படாமல் அரசு அலுவலர்கள் தங்களுடைய சொந்த தொடர்பு எண்களை பயன்படுத்துவதால் குறைகள் குறித்து தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இவர்களுடைய செல்போன் என்னை மக்களுக்கு தெரியும் வகையில் அலுவலகம் முன்பு தகவல்கள் பலகையில் வைப்பதில்லை. அரசு தொடர்பு எங்களையும் வைப்பதில்லை.மேலும் தமிழக அரசால் வழங்கப்பட்ட தொடர்பு எண்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சி மக்கள் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது .
டெண்டர் எடுப்பவர்கள் நல்லா கமிசன் கொடுக்குறாங்களா, சரக்கு வாங்கி கொடுக்குறாங்களா என்று ஆய்வு செய்த பின்னர்தான் இவர்கள் தன்னுடைய ஜில்லக்கு புள்ளக்கு வேலையை மக்களுக்கு காட்டுவார்களாம். விஜயகாந்த் படத்தில் வரும் வசனத்தை போல பெட்டி, புட்டி, குட்டி, என்ற வசனத்திற்கு ஏற்ற வாறு டெண்டர் எடுக்கும் நபர்களிடம் டீல் பேசுகிறார்களாம்.
இப்படி இருந்தா தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இந்த மக்களுக்கு சென்றடையும், என்பதை தமிழக முதல்வர் சிறிது யோசித்தால் போதுமானது என்று அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சமூக வாழ் மக்கள் புலம்பி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த திராவிட ஆட்சியில் சாதி ரீதியான மதம் ரீதியான அரசியல் கும்பலுக்கு நல்லா நன்கொடை அளித்து வருகிறார்களாம், இத பாத்துட்டு பிள்ளையை பெத்தது ஒருத்தன் அதற்கு சொந்தம் கொண்டாடறது ஒருத்தன் என்ற கதையைல்ல இருக்கு என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் தலையில் அடித்து கொள்கிறார்களாம்.!
உடனடியாக அரசு அலுவலர்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், தமிழக அரசு மக்களுக்காக கொண்டுவந்த திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும்.
நேர்மையான முதல்வரான முக ஸ்டாலின் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் பணிகளை மக்களுக்கு சரியாக செய்யாமல் கமிசனுக்காக முறையற்ற சாலை பணிகளை வேடிக்கைபார்த்து கொண்டிருக்கும் வட்டார vவளர்ச்சி அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தர்மபுரி மாவட்டம் மக்கள் தமிழக முதல்வரின் வருகையை யொட்டி கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments
Post a Comment