பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு - சுமார் 13 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மாணவன் உடல் சடலமாக மீட்பு.

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழப்பு - சுமார் 13 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மாணவன் உடல் சடலமாக மீட்பு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவருடைய மகன் பாலாஜி தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று விடியற்காலை 4 மணி அளவில் இவர் காணாமல் போனதாக இவருடைய பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்த நிலையில் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பாலாஜியின் காலனி இருந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

தண்ணீர் அதிகமாக நிறைந்த கிணற்றில் தீயணைப்புத்துறையினரால் மாணவனின் உடல் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு 5 மின் மோட்டார்களை பொருத்தப்பட்டு கிணற்றில் நிரம்பி இருந்த தண்ணீரை வெளியேற்றி பின்னர் பள்ளி சீருடையில் இருந்த மாணவன் 13 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த மாணவனின் உடல் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொம்மிடி காவல்துறையினர் மாணவன் கிணற்றில் தவறி விழுந்தாரா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments