மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

வாணியம்பாடி அருகே பள்ளிக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காரில் சென்ற ஏலகிரி மலைக்கு சென்ற போது விபத்து ஏற்படுத்திய வேலூர் வி. ஐ. டி கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரனை 

 சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் டி ஐ ஜி மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களின் உடலை பார்த்து பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து விஐடி கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஏலகிரி மலை நோக்கி காரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை கடந்து சர்வீஸ் சாலையில் சென்றது.
அப்போது வளையாம்பட்டு பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அந்த வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த மூன்று மாணவர்கள் மீது அந்த கார் வேகமாக மோதியது இந்த விபத்தில் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ரபீக் 13,
விஜய் 13  மற்றும் 6 வகுப்பு பள்ளி மாணவர் சூர்யா ஆகிய மூன்று மாணவர்களும் தூக்கி வீசப்பட்டதில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்  இதையடுதது அங்கு கூடிய பொதுமக்கள் காரில் பயணித்த அனைவரையும் பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதனை தொடர்ந்து இங்கு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் விபத்தை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலிசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை  கலைத்தனர். பின்னர் தகவல் அறிந்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வேலூர் சரக டி ஐ ஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் சடலங்களை மருத்துவமனையில் பார்த்து உடனடியாக பிரேத பரிசோதனை செய்து கொடுக்கும்படி மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர்


சம்பவம் குறித்து கிராமிய போலிசார் காரில்  ஏலகிரி மலைக்கு சென்ற போது விபத்து ஏற்படுத்திய வேலூர் வி. ஐ. டி கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments