பொம்மிடி அருகே தீண்டாமை கொடுமையால் உயிரை விட்ட பள்ளி ஆசிரியர் 12 பக்க மரண வாக்குமூல கடிதம் கண் கலங்கி நிற்கும் பள்ளி மாணவிகள், சோகத்தில் உறைந்த சக ஆசிரியர்கள் தருமபுரியில் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்



பொம்மிடி அருகே தீண்டாமை கொடுமையால் 
உயிரை விட்ட பள்ளி ஆசிரியர் 
12 பக்க மரண வாக்குமூல கடிதம்
 தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் மனைவி கைது

கண் கலங்கி நிற்கும் பள்ளி மாணவிகள், சோகத்தில் உரைந்த சக ஆசிரியர்கள் 

பாப்பிரெட்டிப்பட்டி . பிப், 15-
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் 12 பக்க மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ,
இச்சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவன், மனைவி இருவரையும் பொம்மிடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், இச் சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 



தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோவயது 45 எம்,ஏ   என்,பில்  பி,எச்,டி முனைவர் பட்டம் பெற்றவரான இவர் பொம்மிடி அருகே உள்ள பத்திரி ரெட்டி ஹள்ளி அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார் 

பள்ளிமாணவ, மாணவிகளிடமும், பெற்றோரிடமும் நன்மதிப்பை பெற்றவர் ,இவரது மனைவி தணிகைகேஸ்வரி 40 இவரும் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார்,
 இவர்களுக்கு தீ பன். ரித்திக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்,
வழக்கமாக பள்ளிக்கு சென்ற ஆசிரியர் நேற்று மதியம் தனது மனைவியிடம் வீட்டிற்கு செல்வதாக தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார், மீண்டும் அவரிடம் இருந்து போன் எதுவும் வராததால் வீட்டில் சென்று பார்க்குமாறு இவரது மனைவி ஆசிரியர் தணிகைகேஸ்வரி கணவரின்  தம்பி பீட்டரிடம் வீடுசென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
கொலைக்கு தூண்டிய சிவசங்கர், மனைவி ஜெயா 


 அவரும் உ றவினர்களும் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டு கிடந்தது சத்தமிட்டு நீண்ட நேரம் கூப்பிட்டும் அவர் உள்ளே இருந்து வரவில்லை, இதனால் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் அருண்பிரசாத் பிணமாக இருந்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் சத்தமிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்


விரைந்து வந்த போலீசார்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ,பின்பு வீட்டில் ஆய்வு மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியர் அருண்பிரசாத் 12 பக்கம் கொண்ட கடிதத்தை மரண வாக்குமூலம் என எழதி வைத்துவிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது

கடிதத்தை மீட்டபொம்மிடி பொருப்பு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி ஆய்வு மேற்கொண்டார் அந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு தனக்குவீட்டு மனைநிலம் விற்ற  அதே பகுதியை சார்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் 55 வயது இவரது மனைவி ஜெயா 45 வயது ஆகிய இருவரையும் குறிப்பிட்டுள்ளார் இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர்

மரண வாக்குமூலக்கடிதம் 




இந்த மரண வாக்குமூல கடிதத்தை பள்ளி ஆசிரியர் மிகவும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார்


 அதில் தான் எனது மனைவி 2014 இந்த நிலத்தை நாமக்காரன் என்னும் சிவசங்கர் ஜெயா ஆகிய தம்பதியினரிடம் நிலம் வாங்கியதாகவும், நிலம் தனக்கு விற்ற சிவசங்கர் எனக்கு அப்பா போல அவரை வாக்குமூலத்தின் போது கூட அவன் இவன் எனக் கூற மனமில்லை


 எனக்கு வீட்டுமனை நிலத்தை விலை பேசி பணம் பெற்றுக் கொண்டு பொது வழி பாதை 21அடி எனக்கூறி நிலத்தையும் விற்றார் அதன் பேரில் நானும் எனது மனைவியும் நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டினோம்

 மகிழ்ச்சியாக இருப்பதற்காக தோட்டம் வைத்து நாய் ,கோழி, புறா, முயல் வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தோம்


 எங்களிடம் நல்ல உறவு முறையில் பேணி வந்த நிலம் கொடுத்த நாமக்காரர் சிவசங்கர் அவரது மனைவி மேலும் இரண்டு சென்டு நீளம் கொடுப்பதாக என்னிடமிருந்து நான் நகையை விற்று ரூபாய் 8 லட்சம் ரூபாய் அவர் அவரது மகன் மனைவி முன்னிலையில் கொடுத்தேன்


 அதன் பின்பு நிலத்தை எனக்கு ஒப்படைக்காமல் குடும்பமே ஏமாற்றத் துவங்கினர்


 நன்றாக பேசி வந்த அவர்கள் பணம் வாங்கிய பின்பு என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர், தொட்டால் குற்றம் கோழி அந்த பக்கம் சென்றால் தவறு எனக் கூறி மிரட்டினார் 


அதன் பெயரில் கோழிகள் அனைத்தையும் இவர்கள் தொல்லையால் விற்று விட்டேன்

 21 அடி சாலையில் 20 அடி சாலையாக மாற்றினர்


எனது வீட்டின் அருகில் இதே பகுதியை சார்ந்த எனது உறவுக்காரர் உடன்பிறவா தம்பி நல்ல மனிதர் என்னைப் போலவே நில உரிமையாளர் நாமக்காரர் சிவசங்கர் அவரது மனைவி ஜெயாவிடம் விலை பேசி வீட்டுமனை வாங்கி வீடு கட்டி எனது அருகில் வாழ்ந்து வருகிறார்


 அவரும் நானும் அவரது குடும்பமும் எனது குடும்பமும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தோம்


 நாங்கள் நிலத்தை விற்ற நாமக்காரரிடம் வழி 21 அடி எங்களுக்கு ஒதுக்கி தாருங்கள் சென்று வருவதற்கு சாலையை சரி செய்து கொடுங்கள் என்று கேட்டேன் 


ஆனால் அவர் எங்களுக்கு சாலை அமைத்துக் கொடுக்காமல் இரும்பு கேட் போட்டு பூட்டி வைத்து தினமும் மன உளைச்சலை ஏற்படுத்தினார்


 இது குறித்து நாங்கள் வீட்டுமனை நிலத்தை வாங்கிக் கொடுத்தவர்களிடம் சென்று முறையிட்டோம்


 அவர்களும் அவரை அழைத்து அவர்களுக்கு போக்குவரத்துக்கு வழி சாலையை விட்டு விடுங்கள் என்று கூறினார்


 இந்த நிலையில் கடந்த 15 .1 .2022 அன்று ஆள் வைத்து எங்களை அடிக்க முயற்சிக்கிறார் என்று கூறிய நில உரிமையாளர் நாமக்காரர் சிவ சங்கர் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் எனது 45 ஆண்டுகால வாழ்க்கையில் முதல் முறையாக காவல் நிலையத்திற்கு சென்றேன்


 போலீசார் நாளை வாருங்கள் விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டனர் 


 நாமக்காரர்  சிவசங்கர் அவரது மனைவி பல நாள் திட்டம் திட்டி எனக்கும் எனது உடன்பிறவா தம்பி சாந்து உடன் பிறந்த தம்பியை விட என் மீது அதிக பாசம்    என் குடும்பம் மீது அதிக அக்கறை கொண்டவர்


 நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய நிலத்திற்கு அவரிடம் சென்று நாங்கள் அடிபணிந்து வேண்டுமென்று விரும்பினார்


 இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாமக்காரர் சிவசங்கர் எனது உடன்பிறவா தம்பி பக்கத்தில் குடியிருக்கு சாந்து  மருந்து வைத்து கோழிகளை கொன்று விட்டதாகவும் கொட்டகைக்கு தீ வைத்ததாகவும் கூறி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார் அதை நான் பார்த்ததாகவும் காவல் நிலையத்தில் பொய் சாட்சி கூற கூறினார்


 இதனால் நான் மனமுடைந்து போனேன், எனது உடன்பிறவா தம்பி சாந்து இவன் கொடுத்த தொல்லையால் ஜெயிலுக்கு சென்றுள்ளார்


 எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சாட்சி சொல்லவில்லை என்றால்  என்னையும் எனது மனைவியும் வேலையிலிருந்து எடுத்து விடுவேன் என மிரட்டினார்
எனது மனைவிக்கு கலங்கப்படுத்த முற்பட்டார்.
காவல்துறை இவர் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தம்பி சாந்து நான் உனக்கு துரோகி இல்ல
உண்மைக்காக உயிரை விடுகிறேன்
நாமக்காரன் சிவசங்கர் வஞ்சகம் வெளிவர வேண்டும்
 வாய்மையே வெல்லும்
 மகன்கள் நல்ல படிக்க வேண்டும்
 நல்ல நிலைக்கு வரவேண்டும்
 என் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் நன்றி
 சிஸ்டர் அக்கா ஐ லவ் யூ கட்டி முத்தங்கள் கண்ணீருடன்
 மாமியார் அக்கா என்னை மன்னித்து விடுங்கள் 
சிஸ்டர் அக்கா என் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுங்கள்
எனது பிள்ளைகளில் ஒருவர் 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்
 ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம்
 ஒரு நிர்பராதி கூட தண்டிக்கப்பட கூடாது என கூறிய அம்பேத்கர் அவர்களின் பிள்ளைகளின் நிலை இன்று இதுதான்

 பி.சி.ஆர் போடுகிறார்கள் எனக் கூறி குற்றவாளி தப்பிக்கிறார்கள்

 பாதிக்கப்படும்  தாழ்த்தப்பட்டவன் சாகிறான் வாழ்க பாரதம் 
 இயேசுவே லூர்து அன்னை நீர் கண் திறந்ததால் உன் பார்வைக்கு வந்தேன்

 என்னை கண் மூட செய்து விட்டாய்


 எல்லாம் உன் விருப்பப்படி 

எனஅந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் அருண்பிரசாத் மரண வாக்குமூலமாக  எழுதி வைத்துள்ளார் இந்த கடிதம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

பள்ளி ஆசிரியருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி நீண்ட நாள் தொல்லை கொடுத்ததாக இதனால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலை செய்து கொண்ட பள்ளி ஆசிரியர் அருண்பிரசாத் (எ) லியோவின் மனைவியான ஆசிரியை தணிகையேஸ்வரி போலீசில் புகார் கொடுத்ததால் நாமக்காரர் என்னும் சிவசங்கர் அவரது மனைவி ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டிருந்தபோது அய்யய்யோ எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு என்ன ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க என அடிக்கடி கூறியதால் இது மிகப்பெறிய நடிப்பு என யூகித்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது நமது செய்தியாளர் அங்கே சென்ற போது அங்கே காவல்துறையினர் உள்ளே நுழையவும் காவல் நிலையம் வெளியில் நின்று வீடியோ எடுக்கவும் தடை செய்தனர்.  பிறகு மருத்துவ சிகிச்சை முடிந்த பின்பு மருத்துவ பணியாளர்களிடம் ஜெயா அவர்களுக்கு என்ன பிரச்சனை கேட்டபோது எதாவது பிரச்சனை என்று வந்தாலே இப்படி வந்துருவாங்க இது எப்பவும் போலத்தான் என தலையில்  அடித்து கொண்டனர் மருத்துவ பணியாளர்கள்..!  இதனை அறிந்த பொம்மிடி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி  செம்ம கடுப்பில் மீண்டும் விசாரனையை தொடங்கினார். பிறகு பாப்பிரெட்டிப்பட்டி  குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இந்த நிலப் பிரச்சனை காரணமாக வீட்டு நிலம் வாங்கி வீடு கட்டி குடியிருந்த சாந்து என்பவர் மீது கைது செய்யப்பட்ட நாமக்காரர் சிவசங்கர் இவரது மனைவி ஜெயா கொடுத்த புகாரில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. கணவர் மனைவி குடியிருக்கும் சாந்து தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக காவல்துறையை மிரட்டி பதிய வைத்ததாக புகார் தற்போது எழந்துள்ளது.
உடன் பிறவா சகோதரன் சிறைக்கு சென்றதால் மனமுடைந்து ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Comments