பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன்

தருமபுரி மேற்கு மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம்,ஆலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மருக்காலாம்ப்பட்டி கிராமத்தில் தமிழர் திருநாளாம் தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறுபான்மை மக்கள் முஸ்லிம்கள்,கிருஸ்தவர்கள்,இந்துக்கள்,  அனைத்து சமுதாய மக்கள் பங்குபெறும் சமத்துவ பொங்கல் விழா  மற்றும் நலதிட்ட உதவி வழங்கும் விழா பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்
முன்னாள் அமைச்சரும்,தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முனைவர் திரு பி.பழனியப்பன் அவர்கள் கலந்துக்கொண்டு நலதிட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மெடிக்கல் அ.சத்தியமூர்த்தி,,ஒன்றிய குழு உறுப்பினர் தாமோதிரன்,தெய்வாணிசின்னராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கார்மேகம்,ஒன்றிய துணை செயலாளர்கள் வே.செல்வன்,ஜாகிதா செரீப், மாவட்ட பிரதிநிதி ரவி,வழக்கறிஞர் சக்திவேல்,வடிவேல்,தண்டபாணி கிளைக்கழக செயலாளர்கள் ராஜமாணிக்கம்,ராவணன்,ஒய்வு பெற்ற விஏஓ கோவிந்தசாமி,சந்தோஷ்,ஆசிரியர் இராமகிருஷ்ணன்,ஊராட்சிமன்ற துணை தலைவர் பார்கவி ராஜாராமதாஸ்,மகாலிங்கம்,கதிரவன்,மனோகரன்,குமரன்,மருத்துவர் ராஜா 
 பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றியக் கழக நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட, ஒன்றிய அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற – கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கழக தோழர்கள கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments