மனித கழிவுகளை கலந்து மனித நாகரிகத்தை இழந்த பொம்மிடி தங்கவேலு நூற்பாலை - சிறப்பாக செயல்படும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே இயங்கி வரும் தங்கவேலு நூற்பாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் வட இந்தியர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நூற்பாலையில் பணியாற்றி வரும் வட இந்தியர்களை குறைந்தபட்ச ஊதியத்திற்கு பணி அமர்த்தி நூற்பாலையில் தகர அட்டை அமைத்து தங்குவதற்காக இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு கழிப்பறை கட்டிடம் இல்லாமல் வெளிப்புறத்தில் உள்ள சுற்று சுவர் அருகே குளிப்பதும் மற்றும் மலம் கழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட இந்தியர்களின் மனித கழிவுகளை நூற்பாலையில் அருகில் ஓடும் கழிவு நீர் வாய்க்காலில் திறந்து விடுவதால் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெருமளவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தூய்மை பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்டுவார்கள் என்ற சிந்தனை கூட இந்த தங்கவேலு நூற்பாலை நிர்வாகத்திற்கு தெரியாதா என்ற கேள்வி எழுதுள்ளது.
தமிழக அளவில் இந்திய அளவில் நடத்தி வரும் நிறுவனத்திற்கு ஒரு மனித நாகரிகத் தன்மை கூட இல்லாமல் போய்விட்டதா என்று பொம்மிடி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அது மட்டும் இன்றி அப்பகுதியில் உள்ள மக்களை மருத்துவ பரிசோதனை செய்து அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தர்மபுரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆலையினை ஆய்வு செய்யவும் அடிமைத்தனமாக தகர கொட்டகையில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மீட்கவும் இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தை சிறப்பாக வழிநடத்தி வரும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த நூற்பாளைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
Comments
Post a Comment