வீடுகள் இடிப்பு காவல்துறை மீது மண் தூவி சாபம் ! ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த கோட்டாட்சியர் ? என்ன நடந்தது





வீடுகள் இடிப்பு காவல்துறை மீது மண் தூவி சாபம் ! ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த கோட்டாட்சியர் ? என்ன நடந்தது 



தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேடகட்டுமடவு கிராமத்தில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு அப்பகுதியில் வசிக்கும் அவர்களின் உறவினர்களே வழித்தடம் விடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.       

                           

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பே வழித்தடம் சம்பவம் குறித்து அந்த கிராமத்தில் அரூர் வட்டாட்சியர், வருவாய் அலுவலர், பார்வையிட்டு  ஊரின் மொத்த வழித்தடத்தை அளந்து பாதைக்கான  நிலத்தை எடுத்துக்கொள்வோம் என்று அரசு தரப்பில் கூறியதால் அப்போது ஊர் பொதுமக்கள் ஒன்றாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக சொல்லபடுகிறது.      

                               

ஆனால் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது ஒரு தனி மனிதன் நடப்பதற்கு கூட வழி விடாமல் இங்கே துன்புறுத்தப்பட்டதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதனால் உயர் நீதிமன்ற தரப்பில் வழித்தடத்தை ஆக்கரிமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் நிலத்தை மீட்டு பாதையை அமைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

 இதனையடுத்து நேற்று 27-01-2023 அன்று அரூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் துறையோடு வருவாய்துறையினர் ஆக்கரிமிப்பு இடங்களை ஜே சி பி இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் கஷ்ட பட்டு கட்டிய கட்டிடங்களை இடிப்பதை கண்டு  காவல்துறையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு காவல்துறைக்கும் மண்ணைத்தூவி சாபமும் விட்டனர். ஒரு பக்கம் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லப்பா என்று ஓரம் ஒதுங்கி வேடிக்கை பார்த்தார்  அரூர் கோட்டாட்சியர். கண்ணீருடன் கண்கலங்கி கத்தி பேசும் பெண்களும்,  பேசமுடியாமல் பரிதவித்த ஆண்களும் நின்றதைக்கண்ட ஒரு சில காவல்துறையினர் மனம் நொந்து நின்றனர். 


மனம் நொந்த ஒரு சில காவல்துறையினர்  இதுபற்றி கூறும்போது, இந்த நிகழ்வை பார்க்கும்போது வலிக்கிறது, இன்றைய காலகட்டத்திற்கு ஒரு அடி ஆழம் தோண்டி அதில் கட்டிடம் எழுப்புவது எவ்வளவு சிரமும் என்பது எங்களுக்கும் தெரியும் ஆனால் காவல்துறை மக்களுக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று காவல்துறை ஒருபக்கம் புலம்புகின்றனர்.


 ஒன்றுமே அறியாத காவல்துறையை கண்டு சாபம்விடும்  மக்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் தங்களுடைய நிலத்திலிருந்து சாக்கடை  கால்வாய்க்கும் இடம் விட்டு வீடு கட்டினால் ஊரும்  சீராக இருக்கும் அதை விட்டுவிட்டு அரசுடைய பொதுச்சொத்தை ஆக்கரிமிப்பு செய்தால் ஒரு நேரத்தில் இந்த நிலைதான் உருவாகும் என்பதை அனைத்து மக்களும் உணரவேண்டும்.  

அதுமட்டுமின்றி ஒருகிராமத்தில் வாழும் மனிதன் அவனுடை வாழ்வாதரமும்  எப்படி உள்ளதென்றும்  ஒரு கிராமம் எந்த நிலையில் உள்ளதென்றும்  ஆய்வு செய்து அரசுக்கு, வருவாய்துறையினர் , கிராம அலுவலர்  தகவல் கொடுத்திருந்தால் முதல் கட்டத்திலேயே உருவாகும் தவறுகளை தடுத்திருக்கலாம். 

ஆனால் வருவாய்துறையினர் மற்றும் மாவட்ட அரசு ஊழியர்கள் லஞ்சம்  வாங்கியோ  அல்லது ஆதிக்கம் கொண்ட மக்களுக்கு ஆதரவாக இருந்து மெத்தனபோக்கில் இருப்பதால் இறுதிகட்டத்தில்  இந்த வேடகட்டமடவு மக்களின் கண்ணீர்தான் எல்லோருக்கும் ! என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறினார்.

Comments