ஊறல் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு ஊறுகாய் வைத்த அரூர் தனிப்படை காவல்துறை


கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பயர் நாயக்கம்பட்டியில் கள்ள சாய்ராயம்  காய்ச்சி  வருவதாக வந்த தகவலின் பெயரில் டிஎஸ்பி புகழேந்தி கணேசுக்கு வந்த தகவலின் பெயரில் எஸ்ஐ சக்திவேல் கமலநாதன் தலைமையிலான தனிப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர். பிறகு தகவல் கிடைத்த வைர நாயக்கம்பட்டியில் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவ் ஊரைச் சேர்ந்த பழனி 67 தனது சொந்த நிலத்தில் சாராயம் காய்ச்சுவதை கண்ட தனிப்படையினர், அவர் அருகில் சென்றவுடன் ஆகா நமக்கு ஊறுகாய் வச்சிட்டாங்களே என்ற மன உறுத்தலில் திகைத்து நின்றுள்ளார். ஷாக் ஆகி சிலையாக நின்ற பழனியைய கைது செய்து அவரிடம் இருந்த ஒரு லிட்டர் சாராயம் 15 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்

Comments