பட்டுக்கோணம்பட்டியில் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கல்

பட்டுக்கோணம்பட்டியில் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கல்



பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறையின் சார்பாக ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தாது உப்பின் பயன்பாடுகள் குறித்த செயல் விளக்கம் பட்டுக்கோணம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இச்செயல் விளக்கத்தில் கால்நடை  பராமரிப்பு துறையின் சார்பாக உதவி கால்நடை மருத்துவர் சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தாது உப்பின் பயன்பாடுகள் குறித்தும், அதனைப் பயன்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக  செயல் விளக்கம் அளித்தார், மேலும் செயல் விளக்கத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர்  சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள சண்முகம்,  மனோஜ் குமார் ஆகியவர்கள் கலந்து கொண்டனர், விளக்கத்தில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments