பொம்மிடி முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
பொம்மிடி முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட கூட்டமைப்பு துணை தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் சி எம் ஆர் முருகன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து மதத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கலோ பொங்கல் என ஓசையிட்டு உற்சாகமடைந்தனர்.
ஓ.எஸ்.டி ஆப்பரேட்டர், தூய்மை பணியாளர், துப்புரவு பணியாளர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பணியாளர் மற்றும் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
Comments
Post a Comment