தளபதி வழியில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் சரவணன் ! கடைப்பிடிப்பார்களா தருமபுரி திமுக தொண்டர்கள் ?
பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ் சரவணன் அறிக்கை!பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் தை-1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இன்நன்நாளில் உறுதிமொழி ஏற்பு தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கார் , பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திராவிட பேரரசன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்கள் நல் ஆட்சியில் நம்மை வழி நடத்தும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும், மண்ணின் மைந்தரும் , தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் ஆலோசனை படியும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும், சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்கவும் தை-1 தமிழ் புத்தாண்டில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில் இனி வரும் காலங்களில் நடத்தப்படும் அனைத்து கழக நிகழ்ச்சிகளிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளக்ஸ் பேனர்களை நமது முதல்வர் , தளபதியார் ஆணைக்கிணங்கபொது இடத்தில் வைப்பதை தவிர்ப்பது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர்
அண்ணன் தளபதி அவர்கள் ஏற்கனவே பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்கள், ஆனால் கழக தோழர்கள் ஆர்வ மிகுதியால் அதை சரிவர கடைபிடிக்க முடியாமல் இருந்து வருகின்றோம்.
ஆதலால் வரும் இந்த தமிழ் புத்தாண்டு முதல் பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்தை முற்றிலும் நிறுத்த உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்
அதற்கு பதில் சமூக வலைதளங்களில் திராவிட மாடல் ஆட்சியின் தகவல்களை மக்களிடம் முழ மூச்சுடன் கொண்டு சேர்ப்போம் , கழக நிகழ்ச்சிகள் அனைத்திலும் கழக இருவண்ண கொடிகளையும் , தோரணங்களையும் கட்டி சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு கழக நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாக நடத்துவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க மேற்கு ஒன்றிய கழகத்தைச் சார்ந்த உடன்பிறப்புகள் இந்த உறுதி மொழியை கடைபிடிக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment