பாப்பிரெட்டிப்பட்டி பி எஸ் சரவணன் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.

 

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் போதக்காடு ஊராட்சிக்குட்பட்ட  முல்லைநகர் கிராமத்தில் நடைபெற்றது. 

இம் முகாமில் சுமார் இருநூற்றுக்கும்  மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் குடற்புழு நீக்குதல் தாது உப்பு வழங்குதல் கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது .இதில் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  நலக்குழு உறுப்பினரும்,திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான திரு பி எஸ் சரவணன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.  பின்னர் விவசாயிகளுக்கு   தாது உப்பு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் ,கால்நடை மருத்துவர்கள்  மகபூப் கான்,C.சந்திரசேகர்,பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீகோகுல்நாத்,திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்,கிளைக்கழக செயலாளர்கள் குமார்,மோகன்,மாது  மற்றும் பணியாளர்கள், ஏராளமான விவசாயிகள்  கலந்து  சிறப்பித்தனர்.

Comments