நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பர புரத்தை சேர்ந்தவர் பால்துரை(62) மற்றும் ராகவன். கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவரும் இன்று காலை நாங்குநேரி அடுத்துள்ள தெய்வநாயகம் பேரில் உள்ள தனியார் தோட்டத்திற்கு வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நாங்குநேரி அருகே தாழைகுளம் நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற போது நெல்லையிலிருந்து வந்த கார் மோதிய விபத்தில் பால்துரை என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த ராகவன் காயத்துடன் உயிர் தப்பினார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து மூன்றடைப்பு போலீசார் நாங்குநேரி சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment